09.03.2019
தூத்துக்குடி
வி வி டைட்டானியம் நிறுவனத்தில் மர்மம் முறையில் ஒருவர் மரணம்
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வி வி டைட்டானியம் மற்றும் கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது .
இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த கல்யாண சுந்தரம் (56) த /பெ ஆண்டி (08.03.2019) விஷ வாயு தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது .இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்துள்ளார் காலையில் பணிக்கு சென்று உள்ளார் பணி செய்து கொண்டு இருக்கும் போது மூச்சு அடைப்பு ஏற்பட்டு உள்ளது உடனே அவரை தூத்துக்குடி ஏ வி எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் அங்கு அவருக்கு மருத்துவம் செய்ய முடியாமல் மதுரை வேலம்மாள் மருத்துவமைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார் .நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊழியர் இறப்பிற்கு மருத்துத்துவமனைக்கு வி வி டைட்டானியம் அதிகாரிகள் யாரும் வராததால் உறைவினார்கள் உடலை வாங்க மறுத்து வருகின்றனர் மற்றும் இறப்பில் ஏதும் மர்மம் இருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது என்றும் அரசு மருத்துவ மனையில் சேர்க்காமல் தனியார் மருத்துவமனைகளை தேடி சென்றது ஏன் என்றும் உறவினர்கள் வருத்தத்துடன் கேள்வி கேட்டனர் .