ஷயாம்நீயுஸ்
28.03.2019
மீண்டும் மோடி !வேண்டும் மோடி! தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பா .ஜ .க வேட்பாளர் டாக்டர் திமிழிசை !
தூத்துக்குடி பாராளுமற்ற வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலினை நேற்றோடு முடித்தது .தூத்துக்குடி வேட்பாளராக களம் காணும் திருமதி டாக்டர் தமிழிசை நேற்று மாலை தூத்துக்குடி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சார பயணத்தை கூட்டணி கட்சி நிர்வாகி தொண்டர்களுடன் தொடங்கினார் .W .G .C ரோடு மற்றும் V E ரோடு வழியாக சென்று பா ஜ க திறந்துள்ள காரியாலத்திற்கு வந்தடைந்தனர் .வலிமையான பாரதம் வேண்டும் என்றால் மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் எனக்கு திகார் ஜெயில் எந்த பக்கம் இருக்கிறது என்று தெரியாது நான் நேர்மையான
அரசியல் செய்கிறேன் தாமரை மலர்ந்தே தீரும் என்று வாக்குக்கள் சேகரித்தார் .இன்று பா ஜ க காரியாலத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .இதில் மீண்டும் வேண்டும் !மோடி வேண்டும் !என்கின்ற தலைப்பு உள்ள தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான தரம் உயர்த்துவது .வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமித்துவைக்க நீர் தேக்கம் .தடுப்பணை ,கடல் நீரை குடிநீராக்கி அதை கோரம்பள்ளம் குளத்தில் சேமித்து வைப்பது போன்ற பல திட்டங்களை தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார் .மற்றும் அவர் பேசுகையில் ஜெயலலிதா இறப்பை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் தெரிவித்தார் .திருப்பரங்குன்றம் இடை தேர்தலில் ஜெயலலிதா கைரேகைக்கு பதில் போலி ரேகை வைத்தது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார் .இதில் அ தி மு க மாவட்ட செயலாளர் திரு சண்முகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.