ஷயாம் நியூஸ்
23.03.2019
*தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யத்தின் செயல்வீரர் கூட்டம்*
தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மக்கள் நீதி மையத்தின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டிபிஎஸ் பொன் குமரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயல்வீரர் கூட்டம், தூத்துக்குடி ராஜ் தியேட்டர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு , தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிபிஎஸ் பொன் குமரன்,தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்வைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிப் பொறுப்பாளர்கள், தலைமை கழகப் பேச்சாளர் திவ்யா பாரதி, மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.