ஷயாம்நீயுஸ்
16.03.2019
நியூஸிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
நியூஸிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக அப்பாவி இஸ்லாமியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
இந்த கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் மரணடைந்துள்ளதாகசெய்தி வெளிவந்துள்ளது இது போண்ற தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்து மரண தண்டனை அளிக்க வேண்டும் மெனவும் இந்த கொடூர செயலை உலக நாடுகள் ஓன்றினைந்து வண்மையாக கண்டிக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் நியூஸ்லாந்து நாடு இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார