ஷ்யாம் நியூஸ்
19.03.2019
ஸ்டெர்லைட் படுகொலைகள் பற்றி வாய்திறக்காத கனிமொழி !
தூத்துக்குடியில் இன்று தி மு க தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தி மு க மற்றும் கூட்டணி கட்சி கூட்டத்தில் உரையாற்றும்பொழுது தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிப்பு போராட்டத்தில் பலியானவர்ளை பற்றியோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது பற்றியோ வாய் திறக்காதது ஏன் ?மேலும் இன்று எதிர் கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஸ்டெர்லைட் ஆலைமூடுவது பற்றி ஒரு வரிகூட இல்லையே ஏன் ?அப்படியானால் எந்த ஆட்சி வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை மூட வாய்ப்பு இல்லையா ?
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பி ஜே பி க்கு ஸ்டெர்லைட் பணஉதவி செய்வதாக பொதுமக்கள் பரவலாக பேசிவரும் நிலையில் தற்போது தி மு க வும் ஸ்டெர்லைட் பற்றி வாய் திறக்காதது தூத்துக்குடி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .
.
ஜாதி மதம் பார்க்காமல் தொண்டர்களை களப்பணியாற்ற அழைக்கும் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் சமீபத்தில் ஜாதி தொடர்பான சர்ச்சையான கருத்தை தெரிவித்த திருமதி கீதாஜீவன் அவர்களின் கருத்தை ஆதரிக்கிறாரா என்று சம்பந்த பட்ட சமுதாய மக்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர் .