ஷ்யாம் நியூஸ்
19.03.2019
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி, திமுக வடக்கு மாவட்ட திமுக தலைமை தேர்தல் காரியாலத்தை, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுக சார்பில் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கீதா ஹோட்டல் அருகே உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, தலைமை தேர்தல் காரியாலத்தை, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.