மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு
ஷ்யாம் நீயூஸ்
12.12.2022
மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு
தூத்துக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ஊராட்;சி மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணியை துவக்குவது இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் கண்கெடுக்கும் பணியாளர்களுக்கு முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 ஊராட்சிகளில் மாப்பிள்ளையூரணி சிறந்த ஊராட்சியாக விளங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அரசின் சார்பில் அறிவிக்கப்படுகின்ற திட்டங்களை முழுமையாக நமது பகுதியில் உள்ள மக்களுக்கு சென்றடையும் வகையில் அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வரும் வேலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்று விளங்கும் வகையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கிணங்க முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், தங்கபாண்டி, ராணி, சக்திவேல், ஸ்டாலின், பாலம்மாள், வசந்தகுமாரி, உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, பாண்டியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன், மற்றும் ஆரோக்கிய மேரி, தர்மலிங்கம், ஆனந்தகுமார், ராமசந்திரன், கௌதம், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.