பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்!
ஷ்யாம் நீயூஸ்
19.12.2022
பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்!
தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை .இங்கு 2003 2005 ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏ ராஜம்மாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம் கட்டித் தரப்பட்டது .அந்த சமுதாய கூடம் கட்டி 20 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு பஞ்சாயத்தால் கட்டிடத்தை இடிக்க தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சமுதாய கூடத்தை இடிப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்படாத நிலையில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபாவின் கணவர்அதிசயராஜ் கட்டிடத்தை இடித்து பல லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தில் உள்ள இரும்பு கதவுகள் ஜன்னல்கள் டி எம் டி கம்பிகள் போன்றவற்றை தன்னிச்சையாக எடுத்து விற்று விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜனிடம் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் அதிசயராஜ் சமுதாயக்கூட கட்டிட கம்பிகளை எடுத்து விற்று விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இது குறித்து தாங்களின் நிலைபாடு என்ன என்று கேட்டபொது பொதுமக்கள் அவன் அப்படித்தான் இருப்பான் என்று கிராம மக்களை ஒருமையில் பேசியதோடு கட்டிடத்தை இடிப்பதற்கு எந்த அரசு விதிமுறையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டிய அவசியம் இல்லை கம்பிகளை விற்பனை செய்ததை கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். இதிலிருந்து அரசு விதிமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும் பி டி ஓ தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவரோடு கட்டிடத்தின் கம்பிகளை விற்று பங்கு போட்டு ஊழல் செய்துள்ளனர் என்பது தெரிகிறது. இதுகுறித்து காலான்கரை பொதுமக்களிடம் கேட்டபோது மக்களை கிள்ளு கீரையாக நினைத்து ஒருமையில் பேசிய ராம்ராஜை சட்டபடி தண்டிக்கப்பட வேண்டும். இடிக்கப்பட்ட கட்டிடத்தில் உள்ள கம்பிகளின் விலை மதிப்பு எவ்வளவு என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாமல் அரசு பணத்தை கணக்கு காட்டாமல் பி டி ஓ ராமராஜ் மற்றும் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா தனது கணவர் அதிசயராஜ் மூலம் லட்சக்கணக்கான மதிப்புள்ள கம்பிகளை விற்று பணத்தை இருவரும் ஏப்பம் விட்டு அரசை ஏமாற்றியுள்ளனர் . கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் மீதும் மாவட்ட நிர்வாகம் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மற்றும் தற்போதைய பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் கடந்த பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்தபோது பஞ்சாயத்திற்க்கு மின்விளக்கு மற்றும் பொருட்கள் அதிக விலைக்கு வாங்கியதாக ஊழல் குற்றம் சாட்டப்பட்டும் மற்றும் அரசு பணத்தை விரையம் செய்ததாகவும் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். காலான்கரை கிராமம் முழுவதும் தெருக்கள் முழுவதும் சாக்கடையாக உள்ளது .சுகாதாரம் போன்ற துப்புரவு பணிகளை ஒழுங்காக செய்வதில்லை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவித்தனர். கோரம்பள்ளம் பஞ்சாயத்து முழுவதுமே சுகாதாரம் சீர்கேட்ட நிலையில் உள்ளதால் இங்கு நோயாளிகள் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். சுதந்திர காலத்தில் இருந்து இன்று வரை காலாங்கரை கிராமத்திற்கு வரவேண்டிய சுகாதாரமான குடிநீரை இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தை தனது வீடாக பயன்படுத்தி தனது கணவர் பணியாளர்களுக்கு கட்டளையிடுவதும் தனது மகன் தீர்வை முதலியன போன்ற பணி செய்வதற்கும் அமர்த்தியுள்ளார் .அங்கு பணிபுரியும் பஞ்சாயத்து செயலர் டம்மியாக அமர்த்தப்பட்டு அவருக்கு எந்த விவரமும் தெரிவிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்களிடம் அவர் சரியான தகவலை கூற முடியாத நிலையில் உள்ளார். பஞ்சாயத்து நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய பிடிஓ பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கோரம்பள்ளம் பஞ்சாயத்து பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.