ஷ்யாம் நீயூஸ்
23.12.2022
தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சி சார்ந்த கிராமம் காலான்கரை. தனி கிராம்மாக பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வருகிறார் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயகுமார். .இக்கிராமத்திற்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் குழாய் பதிக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்திய பஞ்சாயத்து தலைவர் இதுவரை குடிநீர் வழங்காமல் குளத்து நீரையும் உப்பு நீரையும் கலந்து கொடுத்து வருகிறார் இதனால் அக்கிராம மக்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றன .அதே கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறார். தனி பட்டியலின மக்கள் வாழ்ந்துவரும் காலான்கரை மக்களுக்கு இதுவரை அரசால் வழங்கப்பட்ட சுத்தமான தாமிரபரணி கூட்டு குடிநீரை வழங்கப்படாமல் இழுத்து அடித்து வருகிறார். மற்றும் இக்கிராமத்திற்க்கு 2004 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக சுமார் 30 லட்சம் மதிப்பில் அப்போதைய அதிமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜம்மாள் சட்டமன்ற நிதியில் இருந்து சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் . இந்த சமுதாய கூடத்தில் தான் கிராமத்தில் உள்ள பலரது திருமணங்கள் நடைபெற்று உள்ளது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சமுதாய நலக்கூடத்தை கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பிடிஓ ராமராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் கட்டிடத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் அதனுள் பயன்பாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் டிஎம்டி கம்பிகள் மற்றும் கட்டித்தை இடித்த மணல் செங்கற்கள் உட்பட பல லட்சங்களுக்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை விற்று பஞ்சாயத்து தலைவர் கணவர் அதிசயராஜ் மூலம் கையாடல் செய்துள்ளனர் . கட்டிடத்தில் உள்ள பொருட்களை விற்று அரசுக்கு சேர்க்க வேண்டிய பணத்தை டெண்டர் ஏதும் விடாமல் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமலும் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜனை தொடர்பு கொண்ட போது கட்டிடத்தை அடிப்பதற்கு டெண்டர் விட வேண்டிய அவசியம் இல்லை கட்டிடத்தில் இருந்த பொருட்களை விற்பனை செய்த பணத்தை அரசுக்கு கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். இது சாத்தியமா என விசாரித்த போது அரசு கட்டிடத்தை இடிக்கும் போது முறையாக டெண்டர் விடுவதும் அதில் வரும் பணத்தை அரசு கணக்கில் செலுத்தி வரவு வைப்பதும் அலுவலர்களின் பொறுப்பு இவ்வாறு தன்னிச்சையாக செயல்படுவது தவறு என்றும் தெரிவிக்கின்றனர். மற்றும் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் தனது கணவர் அதிசயராஜுடன் சேர்ந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் தங்களுக்கு குறிப்பிட்ட வாக்குகள் வேண்டும் என்பதற்காக காலான்கரை கிராமத்தில் உள்ள பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் போது குறிப்பிட்ட நபர்களுக்கு அரசு இடத்தை தானம் செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றுசுவர் கட்டியுள்ளார் இவர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் அரசு இடங்களை பாதுகாப்பதற்கு பதிலாக தன் சுயநலத்துக்காக செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது சரியான காரணம் சொல்ல மறுத்து வருகிறார் பஞ்சாயத்து தலைவர். இந்த தகவல் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் பஞ்சாயத்து தலைவருடன் தவறான போக்குக்கு ஆதரவளித்து வருகின்றனர். தமிழக முதல்வர் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வதற்கும் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவதோடு அவர்களின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு வரும் இந்த வேலையில் பள்ளிக்குச் சொந்தமான அரசு இடத்தை தனியாருக்கு ஓட்டுக்காக தாரை வார்த்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காலான்கரை கிராமத்தில் இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை விற்ற பணத்தை அரசு நிதியில் சேர்த்தார்களா என்பதை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் அரசு நிதியில் சேர்க்கப்படாத பட்சத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் கோரபள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜ் ஆகியோர் மீது சட்டரீத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர் . காலான்கரை கிராமத்தில் இருந்த சமுதாய நலக்கூடம் கட்டிடத்தை யாரும் இடிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் இருந்த சமுதாய நலக்கூடத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.