ஷ்யாம் நீயூஸ்
23.12.2022
சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு!
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணியின் சார்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது அந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி பேசினால் வீட்டு வாசலில் காலை வெட்டுவோம் நாக்கை அறுப்பேன் என பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்
இது தொடர்பாக திமுக மாணவர் அணி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன் என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கலவரத்தை தூண்டுவது போன்று சசிகலா புஷ்பா பேசியது தூத்துக்குடியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.