ஷ்யாம் நீயூஸ்
12.12.2022
தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர். வரும் 18ஆம் தேதி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்த உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை இன்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
தூத்துக்குடி ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் கிளை மன்றங்கள் சார்பாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பழனிமுருகன், N. முருகன், ராமசாமி சிவசூரியன்,வள்ளிநாயகம், லிங்ககுமார், தனபால், காந்தி, ராஜ், கண்ணன், சந்தனம், மூர்த்தி, ரஜினி முருகன், ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்