தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு?
ஷ்யாம் நீயூஸ்
01.12.2022
தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாயகிபுரம் கோரம்பள்ளம் சுற்று வட்டார 18 கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வரும் சுடலைமாட சுவாமி கோவில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடு சாலையில் அருகில் உள்ளது. இக்கோயில் இருக்கும் 52 சென்ட் இடம் தற்போது சந்தை மதிப்பில் 10கோடிக்கு மேல் உள்ளது என தெரிகிறது.
சுடலைமாடசுவாமி கோயில் இருக்கும் கோரம்பள்ளம் சர்வே எண் 26/3B புதிய எண் 26/3B1A நிலம் 60 சென்ட் தனக்கு பாத்தியப்பட்டது என்று கோரம்பள்ளத்தைச் சார்ந்த G.K தேவராஜ் என்பவர் 1993 தூத்துக்குடி நீதிமன்றத்தில் விளிம்புகை வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம் G.K.தேவராஜ் தாக்கல் செய்த விளிபுகை வழக்கை 11 2 1998ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தள்ளுபடி ஆனதை மறைத்து G.K தேவராஜ் அந்த நிலத்தை விற்பதற்கு முயற்சித்து வருவதாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது இதனால் அன்றைய பிரபல நாளிதழான கதிரவனில் 22.4.1999 ல் தங்கள் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த பொது அறிவிப்பில் மேற்படி நிலத்தை G.K தேவராஜ் விற்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்த நிலத்தை யாரேனும் கிரயம் செய்ய வேண்டாம் எனவும் மீறி வாங்கினால் வாங்கினவருக்கு அந்த நிலம் சட்டபடி செல்லாது என்றும் அந்த பொது அறிவிப்பு விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 8 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்க்காக நெடுஞ்சாலைதுறை எடுத்துகொண்டது.இந்நிலையில் தேவராஜ் இறந்து விடவே அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி நீதிமன்றம் தேவராஜ் விளிம்புகை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை மறைத்து காலம் சென்ற G.K தேவதராஜுன் மனைவி மற்றும் வாரிசுதாரர்கள் 2008ல் சென்னையை சார்ந்த சாம் தேவதாஸ் என்கிற நபருக்கு பவர் பத்திரம் கொடுத்துள்ளனர். சாம் தேவதாஸ் தனக்கு கொடுக்கப்பட்ட பவர் பத்திரத்தை 2012ல் தானே கிரைய பத்திரமாக மாற்றி உள்ளார் என்றும் பெரியநாயகபுரம் மற்றும் சுடலைமாடசாமி கோவிலை தரிசித்து வரும் 18 கிராம பட்டியலின பொதுமக்கள் கூறுகின்றனர். நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை மீறி எப்படி மீண்டும் பவர் பத்திரம் பதியப்பட்டது மீண்டும் அந்த நபருக்கு பத்திரப்பதிவு எப்படி நடைபெற்றது என்ற கேள்வியும் எழுப்புகின்றனர். 2012ல் கிரைய பத்திரம் பதிவு செய்த சாம் தேவதாஸ் பத்திரப்பதிவை வைத்து தீர்வை முதலானவற்றை செலுத்துகிறார் பின்பு இந்த இடம் தனக்கு சொந்தம் கூறவே மீண்டும் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது அதனைத் தொடர்ந்து 2019-ல் ஆர்டிஓ விசாரணை நடத்தியுள்ளார் இதில் இந்த இடத்தில் பிரச்சனை இருக்கும் என்றால் இரு தரப்பினரையும் சிவில் நீதிமன்றத்தை அணுக சொல்லி முடித்துள்ளதாக கூறுகின்றனர். இரு தரப்பினருக்கும் பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் நிலத்தை அளந்து தர தூத்துக்குடி வட்டாட்சியருக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணையை பெறுகிறார் சாம் தேவதாஸ். இதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் நில அளவையார்கள் வந்து நிலத்தை அளக்க முயற்சித்தனர் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புக்கு உள்ளானது கோயில் இருக்கும் வளாகத்திற்குள் கிராம மக்களை உள்ளே செல்ல அனுமதி அளிக்காதால் தூத்துக்குடி ஏ எஸ் பி சதீஷை எதிர்த்து பெரியநாயகிபுரத்த சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார் அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . நிலத்தை அளப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அப்பகுதியில் பெரும் கூட்டம் திரண்டது இரு தரப்பினரிடையும் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் சமரசம் பேசி அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தினார். நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்பது நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது அதனை செயல்படுத்த தங்களை அனுமதிக்குமாறு கிராம மக்களிடம் கூறினார் அதனைத் தொடர்ந்து நிலம் அளக்கப்பட்டது மேற்படி தங்களுக்குள் உள்ள நிலப் பிரச்சினைகளை இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடலாம் என்ற அறிவுரையும் வழங்கினார் இதனைத் தொடர்ந்து கூட்டம் கலையத் தொடங்கியது.