ஷ்யாம் நீயூஸ்
26.12.2022
தூத்துக்குடி ஊராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் ஆட்சியருக்கு மனு!
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியுடன் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜுடன் இடித்து கட்டிடத்தில் உள்ள கதவு ஜன்னல் பொருட்களை விற்றதோடு அதில் உள்ள செங்கல் ஜல்லி மணல் ஆகியவற்றை பஞ்சாயத்து தலைவரின் ஊரான பெரியநாயகிபுரத்தில் உள்ள தனது காலி மனை பள்ளமாக உள்ள இடத்தில் நிரப்புவதற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஒரு வாரம் நடைபெற்ற இந்த பரபரப்பு போராட்டத்திற்கு பின் இன்று காலான்கரை கிராம மக்கள் சார்பாக சமுதாய நலக்கூடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் அவரது கணவர் அதிசயராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலங்கரை இங்கு 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறோம் நாங்கள் பெரும்பாலும் கூலி வேலையும் விவசாய வேலையும் செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் ஒன்றை தமிழக அரசு கட்டித் தந்தது. நல்ல முறையில் இயங்கி வந்த அந்த சமுதாய நலக்கூடத்தில் எங்கள் கிராமத்தின் பொதுமக்களின் திருமண நிகழ்வுகள்,மற்றும் பேரிட காலங்களில் மக்களுக்கு தங்குவதற்கான பாதுகாப்பான இடமாகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த ஒரு சமுதாய நலக் கூடத்தையும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் மற்றும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வந்த சமுதாய நலக்கூடத்தினை சில தினங்களுக்கு முன் இரவோடு இரவாக இடித்து விட்டனர் மற்றும் கட்டிடத்தில் உள்ள இரும்பு ஜன்னல்கள் கதவுகள் டிஎம்டி கம்பிகள் செங்கற்கள் குண்டு கற்கல் என அனைத்தையும் எடுத்து சென்றதோடு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை விற்று தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொண்டனர் அரசு கட்டிடத்தை இடிப்பதற்கான அரசு வழிமுறைக்களின்படி எதுவும் நடக்காமல் கட்டிடத்தில் இருந்த பொருட்களில் விற்ற பணத்தை அரசு கணக்கில் வரவு வைக்காமல் சுயநலமாக எடுத்து கொண்டனர் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான சமுதாய நலக்கூடத்தினை உடனடியாக கட்டித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.மற்றும் எங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீர் சுதந்திர காலத்தில் இருந்து இன்று வரை தரப்படாமலேயே இருந்து வருகிறது . பஞ்சாயத்து தலைவர் சரியாக கிராமத்தை கவனிக்காததால் சுகாதாரம் சீர்கேடு நிறைந்த கிராமமாகவும் இருந்து வருகிறது இதனால் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. மத்திய அரசின் கீழ் ஜில்ஜீவன் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கோரம்பள்ளம் பஞ்சாயத்தின் கீழ் இருக்கும் கோரம்பள்ளம் சுப்ரமணியபுரம் பி எஸ் பி நகர் போன்ற கிராமங்களுக்கு வழங்குவது போல் வல்லநாடு கூட்டு குடிநீர் இணைப்பில் இருந்து எங்கள் கிராமத்திற்கும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பஞ்சாயத்து நிர்வாகத்தால் வழங்கப்படும் குளத்து நீரை குடிநீர் என்ற பெயரில் கொடுப்பதால் குடிப்பதற்கு உகந்த நீராக இல்லாமல் இருந்து வருகிறது மற்றும் எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும்போது பள்ளியில் பயிலும் குழந்தைகள் விளையாட்டுக்கு பயன்படுத்தி வந்த பள்ளிக்கு சொந்தமான அரசு இடங்களை ஓட்டுக்காக தனியாருக்கு தாரை வைத்து சுற்றுச்சுவர் கட்ட அனுமதித்து உள்ளார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ். பள்ளிக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து மீண்டும் பள்ளி இடத்தை மீட்டு தர வேண்டும் என்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.