குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.
ஷ்யாம் நீயூஸ்
31.12.2022
குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.
குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கில் அங்கு குளித்து கொண்டிருந்த குழந்தையை வெள்ளநீர் இழுத்துச் சென்றது. ஆபத்தில் சிக்கி குழந்தையை தன் உயிர் பாராமல் மின்னல் வேகத்தில் காப்பாற்றி தூத்துக்குடி இளஞ்சரை தூத்துக்குடி ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 29 12 2022 அன்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு தனது காரில் குற்றாலம் சென்றுள்ளார். பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குளித்துக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை வெள்ளநீர் இழுத்துச் சென்றுள்ளது பொதுமக்கள் குழந்தை குழந்தை என கத்தவே சத்தம் கேட்டு அங்கு சென்ற விஜயகுமார் குழந்தை ஆபத்தில் சிக்கி உள்ளதை கண்டு தன்னுயிர் பாராமல் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை மின்னல் வேகத்தில் காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாருக்கு அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் பாராட்டினர். குழந்தை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அந்த இளைஞரை அழைத்து பாராட்டி பெருமை சேர்த்தார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் அந்த இளைஞரை தனது அலுவலகத்தில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியதோடு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார் மற்றும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார் தன்னுயிர் பாராமல் குழந்தையைகாப்பாற்றிய இளைஞரை வாழ்த்தி பாராட்டியதோடு குழந்தையை காப்பாற்றி தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.