முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத உணர்வை மதிக்கிறோம்! மத வெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

ஷ்யாம் நீயூஸ்

25.12.2022

 மத உணர்வை மதிக்கிறோம்! மத வெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

   தூத்துக்குடி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டாம் கேட் போஸ்திடல், பிரையண்ட்நகர், ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்

     போராசிரியருக்கு புகழ் சேர்க்கும் வகையில் 7500 கோடி திட்டத்தில் தமிழக பள்ளிகள் பாராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒன்றை ஆண்டு காலத்தில் 70 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்இ தேர்வு மூலம் தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலை என்ற சட்டத்தை கொண்டு வந்து தமிழர்களின் நலனை பாதுகாத்தது திமுக அரசு வடமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பதால் இந்த சட்டத்தை அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளோம் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது இது போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பெருமாள் கோவில் சந்தனமாரியம்மன் கோவில் திருப்பனி பணிகள் நடைபெறுகின்றன. அறநிலைத்துறையில் காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. ஒன்றைலட்சம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பனைத் தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது. 17 அமைப்புகளை கொண்ட நல வாரியம் செயல்படாமல் மூடக்கி வைத்துள்ளதை திமுக ஆட்சி வந்த பிறகு செயல்பட தொடங்கியுள்ளது. அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு திருமண உதவி கல்வி உதவி வழங்கப்பட்டுள்ளது. 2030ல் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நாடாக இருப்பதற்கு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். தொழில் தொடங்குவோர்க்கு தொழில்கடன், மகளிர் சுய உதவி கடன், என பல வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1500 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டம் முதலமைச்சரின் நேரடி பார்வையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சத்துக்குறைவால் என்ன குறைபாடுகள் உள்ளது என்பதை கணக்கிட்ட போது 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறிய நோய்கள் என இருந்ததை கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் பல கிராமத்தில் உள்ள முதியவர்களுக்கு பலன் உள்ளதாக அமைந்துள்ளது. பொங்கலுக்கு 1000 வழங்கும் திட்டத்தை வரும் 2ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தேர்தலில் கொடுத்த பெண்கள் உரிமைத் தொகை 1000 வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். எல்லா தரப்பினரை பாதிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு டோல்கேட் கட்டணம் உயர்வு இது போன்றவைகள் பிஜேபியின் சாதனையாக உள்ளது. இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக நான் இருப்பதை விட தமிழகம் நம்பர் 1 மாநிலமாக இருப்பது தான் எனக்கு பெருமை என்கிறார் முதலமைச்சர். 14வயதில் பொது வாழ்வில் ஈடுபட்ட கலைஞருக்கு துணையாக இருந்தவர் பேராசிரியர் அன்பழகன் கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் ஆடு மாடு கோழி போன்றவைகள் வெட்டுவதற்கு தடை செய்தது. பழைய வரலாறு எடுத்துப்பார்த்தால் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று எல்லோரும் சாமி கும்பிட முடியாது. கோபுரத்தை பார்த்து கும்பிட்டு விட்டு வெளியில் தேங்காய் உடைத்து செல்லும நிலை இருந்தது. இதையெல்லாம் மாற்றி அந்த உரிமையை பெற்று கொடுத்தது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மத உணர்வை மதிக்கிறோம். மத வெறியை எதிர்க்கிறோம் அவரவர் பின்பற்றும் தெய்வங்களை வழிப்பட வேண்டும். நோட்டாவுடன் போட்டி போட்ட பிஜேபி கூடுதல் வாக்கை பெற முயற்சிக்கிறது. தூத்துக்குடி ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெறுகின்ற பணிகளில் 50 சதவீதம் மாநில அரசும் 50 சதவீதம்மத்திய அரசும் இணைந்த பங்களிப்புடன் தான் பணி நடைபெறுகிறது. இதில் கடந்த காலத்தில் போட்ட திட்டத்தின் படி மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை சுட்;டிக்காட்டி எல்லோருக்கும் பலன் கிடைக்கும்படி பிரையண்ட்நகர் பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் மறு ஆய்வின் மூலம் நல்ல முறையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு கால்வாய் பணிகளை மேற்கொள்ள 40 கோடி சாலை வசதிக்கு 20 கோடி கட்டமைப்பு பணிகளுக்கு 15 கோடி மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கனிமொழி எம்.பி பணிகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. தலைவர் மீண்டும் வாய்ப்பளிப்பார். வரும் காலத்தில் அனைவரும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த துணை நிற்க வேண்டும். என்றார்.


     மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் 100 சதவீதம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி படிப்படியாக பணிகள் நடைபெறுகின்றன. முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் பொருளாதார நெருக்கடி தூப்பாக்கி சூடு என பலவற்றையும் கடந்து வந்துள்ளோம். திமுகவில் 10 வயது உள்ளவரும் 70 வயது உள்ளவரும் கொடி பிடித்து வருகின்றனர். ஆனால் 5 பேர் இணைந்து தேவையில்லாத நமக்கு எதிரான கருத்துகளை இணைய தளம் மூலம் பரப்புகின்றனர், அது வேகமாக எல்லோரிடமும் சென்றடைகிறது. அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும இருக்கின்ற பட்டியலை பார்த்தால் அதில் ஓவ்வொருத்தர் மீதும் என்ன வழக்கு இருக்கிறது. என்ற பட்டியலை வைத்திருக்கிறேன் இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் மீதும் பட்டியல் வைத்திருக்கிறேன். இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற யார் மீதும் வழக்கு கிடையாது. என்று பேசினார்.

மாநில பேச்சாளர் சரத்பாலா பேசுகையில் அதிமுகவை நான்காக உடைத்துவிட்டு அது தற்போது பிஜேபி சித்து விளையாட்டு காட்டுகிறது. அதிமுக என்ற கட்சி அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமியை பற்றி ரவுடி என்று விமர்சனம் செய்துள்ளனர். இது தேவையில்லாத கருத்து 32 ஆண்டு காலம் திமுகவிற்காக உழைத்த கலைஞரின் முரட்டு பக்தன் 2024ல் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முடிவு செய்வார் என்று பேசினார்.

    கூட்டத்தில் தலைமை பேச்சாளர் இருதயராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ்,  மாவட்ட அணி அமைப்பாளர்கள் அன்பழகன், ரமேஷ், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், நலம் ராஜேந்திரன், பிரதீப், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பிரபு, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், பால்ராஜ், டைகர்வினோத், பால்மாரி, பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல். செந்தில்குமார்,ராஜ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், சரண்யா, ராமுத்தம்மாள், மரியகீதா,  வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, வன்னியராஜ், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், சிங்கராஜ், கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், முக்கையா, சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் மீனாட்சிசுந்தரம், குருசாமி, நவநீதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா,  சந்தனமாரி, மற்றும் அல்பட் மணி மகேஸ்வரசிங், பெனில்டஸ், பிரபாகர், ஜோஸ்பர், உலகநாதன், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் அமைச்சர் மேயர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...