ஷ்யாம் நீயூஸ்
25.12.2022
கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே சவேரியார்புரம் பகுதியில் கபடி குழு இருந்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த கபடி குழுவினர் பங்குபெற்று பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த கபடி வீரர் ஜென்சன் கபடி போட்டியொன்றில் விளையாடும் போது எதிர்பாராத வகையில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தகவல் அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கபடி வீரர் ஜென்சன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், கௌதம் மற்றும் சவேரியார்புரம் ஊர் இளைஞரணியினர், கபடி வீரர்கள் உடன் இருந்தனர்.