ஷ்யாம் நீயூஸ்
21.12.2022
கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாத கோரம்பள்ளம் ஊராட்சி செயலர் பொதுமக்கள் அவதி!
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கோரம்பள்ளம் ஊராட்சி செயல் அலுவலராக பணிபுரிபவர் சீனிவாசன் இவருக்கு கம்ப்யூட்டர் என்பது என்னவென்றே தெரியாமல் அதை பயன்படுத்த தெரியாமலும் அலுவலகத்தில் இருந்து பொழுதை கழித்து வருகிறார். கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் வரி செலுத்த வரும்போது கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாததால் பாதி நேரம் வாடகைக்கு ஆள் பிடித்து கம்ப்யூட்டர் பில் போடுவதும் கம்ப்யூட்டருக்கு பில் போட ஆள் கிடைக்காத பட்சத்தில் பல நேரங்களில் பொதுமக்களை அழைக்களிப்பதும் ஆக இருந்து வருகிறார். வீட்டு வரி செலுத்த வரும் பொது மக்களை குடிநீர் வழியை செலுத்தினால் மட்டுமே வீட்டு வரி போட்டு தரப்படும் என்று கட்டாயப்படுத்துகிறார் குடிநீர் கட்டணம் செலுத்தினால் தான் வீட்டு வரி பதியப்படும் என்று எந்த சட்ட விதியும் இருப்பதாக தெரியவில்லை மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு எந்த விதமான முன்னுரிப்பு தகவல்களும் அனுப்பப்படாமல் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களிடம் அடாவடித்தனமாக பேசுவதோடு ரவுடிசம் செய்து வருகிறார் ஏற்கனவே கோரம்பள்ளம் பஞ்சாயத்து நிர்வாகம் சீர் கட்ட நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர் கோரம்பள்ளம் கிராமம் காலான்கரை கிராமத்தில் சமுதாயக்கூடம் இடித்து மறு சீரமைப்பு பணி நடைபெறும் கட்டிடத்தில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் டிஎம்டி கம்பிகள் ஆன பல லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் அரசுக்கு சேர வேண்டிய பணத்தை தன் பாக்கெட்டில் போட்டு நிரப்பி கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கம்ப்யூட்டர் ஆபரேட் செய்ய தெரியாத செயலாளரால் மீண்டும் மீண்டும் நிர்வாகம் பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகிறது இவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர். மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் ஜாதி மத வேறுபாடுகள் அற்ற அனைத்து மதத்தினரும் அனைத்து சமூகத்தினரும் வந்து செல்லும் இடமாக உள்ள அலுவலகத்தில் கிறிஸ்துவ படங்களை வைத்து மதத்தை பரப்பும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி அலுவலகத்தில் அனைத்து மத கடவுள்களின் படத்தையும் வைப்பது அல்லது முதல்வர் படங்களை மட்டும் வைப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இது பொதுமக்கள் வந்து செல்லும் இடமே தவிர கிறிஸ்துவ ஆலயம் அல்ல என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்