ஷ்யாம் நீயூஸ்
12.12.2022
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பதட்டம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டமைப்புகள் அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் தாசில்தார் காவல்துறைனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதால் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டம் நடத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணத்தை அறிவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இவ்வாறு பதட்டம் நடத்தும் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏஜென்சிகளை வைத்து பணம் கொடுத்து கூலிக்கு ஆட்களை அழைத்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென மனு கொடுக்க வைத்து வருகின்றனர் இதனால் தூத்துக்குடியின் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் பதட்டமாக சூழ்நிலையாகவே இருந்து வருகிறது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டுக் குழு எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின்படி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட தாசில்தார் மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்க உள்ளனர் இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஆட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதனால் தூத்துக்குடியில் சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏஜென்சிகளை வைத்து மீண்டும் கலவரத்தை தூண்ட நினைத்தால் ஆலைக்கு எதிராக மீண்டும் பெரிய போராட்டம் நடைபெறும் என்றும போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்