ஷ்யாம் நீயூஸ்
05.12.2022
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியாளர்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது
தேர்விற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாகவும் வேலை வாய்ப்பு அலுவலகம் கடிதம் மூலமாகவும் 7958 விண்ணப்பங்கள் வரப்பட்டன இதில் 6029 நபர்கள் தேர்வு எழுதினர் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி தாலுகாவில் மூன்று தேர்வு மையங்களில் 1525 நபர்களில் 1133 நபர்கள் எழுத்து தேர்வு எழுதினர். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் ஆய்வு செய்தார் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15 16 தேதிகளில் நேர்காணல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு 19 12 22 அன்று நியமன ஆணை வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.