ஷ்யாம் நியூஸ்
22.07.2019
தூத்துக்குடி அருகே திமுக நிர்வாகி வெட்டி படுகாெலை : போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அருகே திமுக நிர்வாகி வெட்டி படுகாெலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
குலையன்கரிசலை சேர்ந்தவர் வேல்சாமி மகன் கருணாகரன் (55). இவர் தூத்துக்குடி யூனியனில் முன்னாள் சேர்மனாக இருந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர். தற்போது திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அங்குள்ள தோட்டத்திலிருந்து கருணாகரன் வெளியே வரும் போது ஒரு மர்மகும்பல் திடீரென அவரை வழிமறித்து வெட்டியது. இதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் புதுக்கோட்டை போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தூத்துக்குடி எஸ்பி., அருண் பாலகோபாலன், ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோத்தினால் இக்கொலை நடைபெற்றதா, அரசியல் காரணமாக நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.