ஷ்யாம் நியூஸ்
11.07.2019
தூத்துக்குடி மாவட்டஆட்சியருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரியை, இன்று மாலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர், மாவட்ட தலைவர் சக்தி.ஆர். முருகன், செயலாளர் கிம சங்கர்,பொருளாளர் ஞானதுரை, துணைதலைவர் சண்முகஆனந்தன், மூத்த பத்திரிகையாளர் குமாரவேல் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் , பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம், குடும்ப நல நிதி உள்ளிட்டவை பிற மாநிலங்களைப் போல குறிப்பாக ஆந்திர மாநிலத்தை போல தாலுகா பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் நலதிட்டங்களை வழங்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்களின் இறப்புக்கு பின்னர், ஓய்வூதியத்துக்கு பின்னால் அவர்களுக்கு கிடைக்கும் அரசு உதவி தொகை பெறுவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களும் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். ஆகையால் அதனை தளர்த்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரால் அளிக்கப்படும் செய்தியாளர் அங்கீகாரத்தை பல மாவட்டங்களில் வழங்கப்படாது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும் தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அங்கீகார அட்டையைக்கூட தமிழகத்தில் உள்ள டோல்கேட்டுகளில் அனுமதிக்க மறுப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வழங்கியது போன்று வீட்டுமனை பட்டா, செய்தியாளர் அடையாள அட்டைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள செய்தியாளர்களுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டி கடந்த மே மாதம் திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் 17வது மாநில மாநாட்டில், அகில இந்திய தலைவர்கள், இந்திய பிரஸ் கவுன்சில் உறுப்பினர்கள், அனைத்து கட்சி அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழக அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்க வேண்டியும், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் நகல் மாவட்டஆட்சியரிடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் தங்களது கோரிக்கைகளை அரசிடம் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாவட்டஆட்சியர் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் வள்ளிராஜ், மீனாட்சிசுந்தரம், ராஜேந்திரபூபதி மாணிக்கம், விக்னேஷ், ஜெயராமன், நடராஜன், சிவகாமிநாதன், முகமது யாகூப்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.