தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
SHYAM NEWS
26.07.2019
தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் உலக பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஜுலை 26 முதல் ஆக.5ம் தேதி வரை நடைெறும் திருவிழா சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடப்படும். நடண்பாண்டில் 437வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். மேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர். கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நநதூரி, எஸ்பி (பொ) அருண் சக்திகுமார், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 4-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான ஆகஸ்ட் 5ம் தேதி (திங்கட்கிழமை) அன்னையின் பெருவிழாவான அன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30மணிக்கு 2ம் திருப்பலியும் கோட்டார் ஆயர் நசரேன் தலைமையில் நடக்கிறது. பெருவிழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் உதவி பங்குத்தந்தை கிங்க்ஸ்டன், ஜேசுராஜா, அருட் சகோ மைக்கேல் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி வருகிற ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இன்று தூத்துக்குடியி்ல் திருவிழாவிற்கு வந்த மக்களின் கைப்பைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.