தூத்துக்குடியில் வருகிற 25ம் தேதி துடிசியா சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு (BUYER SELLER MEET) நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் வருகிற 25ம் தேதி துடிசியா சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு (BUYER SELLER MEET) நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக துடிசியா நேரு பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கமானது ஓர் பதிவு செய்யப்பட்ட, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இந்த சங்கமானது 1991 முதல் சீரிய முறையில் செயல் பெற்று வருகிறது. இந்த சங்கத்தில் 450 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து உறுப்பினராய் உள்ளனர். குறிப்பாக உப்பு உற்பத்தி, உணவு உற்பத்தி,கனரக தளவாட உற்பத்தி, அச்சுத் தொழில், இரசாயனம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் பதிவு செய்து உள்ளது.
"துடிசியா” என்னும் இந்த அமைப்பானது, தொழிற்துறைகளின் தேவைகள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது மாவட்டத்தில் சிறு தொழில் வலுப்பெற உதவி புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் உள்ள தொழில் முனைகள் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நமது மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல், பயிற்சி அளித்தல், மேலும் அவர்கள் தொழில் தொடங்கி சிறப்புற நடத்திட தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறது.
துடிசியாவின் முக்கிய சாதனைகள் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை நடைபெறும் "TIE" என்ற தூத்துக்குடி மாவட்ட தொழில் கண்காட்சியை குறிப்பிடலாம். இதில் பல வெளிநாட்டு கம்பெனிகள், பிற மாநில கம்பெனிகள் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நிறுவனங்கள் பங்கு பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி உள்ளனர் என கூறினால் மிகையாகாது. மேலும் எங்களது துடிசியா சங்கத்தின் மணி மகுடமாக பெரும் நிறுவனம் / பொது நிறுவனம் மற்றும் சிறு நிறுவனம் குறு நிறுவனங்கள், ஒப்பந்த்தாரர்கள் பங்கு பெறும் "BUYER SELLER MEET” – DSF GRAND PLAZA –ல் வைத்து 25/07/2019 –ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பின் நோக்கமானது பெரும் நிறுவனங்களின் தேவைகள், பொருட்கள் வழங்கல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செய்ய கூடிய வேலைகள் பற்றிய விவரங்களை எடுத்துரைப்பர். இதில் பங்குபெறும் நமது மாவட்டத்தில் உள்ள மற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதின்படி புரிந்துணர்வு ஏற்படுத்தப்படும் இதனை நமது மாவட்டத்திற்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்குழு சந்திப்பின் ஏற்பாடுகளை துடிசியா அமைப்பின் தலைவர் நேரு பிரகாஷ் செயலாளர் ராஜ செல்வின் மற்றும் SKSC தர்மராஜ் ஆலோசனை மற்றும் செயல் திட்டதோடும் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்போடும் சீரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொழில் சங்கம விழாவை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் நாகராஜன் முன்னிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தலைவர் ராமசந்திரன் தலைமையிலும், பாளையங்கோட்டை பெல் பின்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குனர் குணசீலன் செல்லதுரை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர். இந்த சங்கமத்தில் ஸ்பிக், டாக், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், என்.டி.பி.எல், கோஸ்டல் எனர்ஜின், மகா சிமென்ட்ஸ், ஜிர்கோனியம் காம்பெளக்ஸ், வி.வி.டைடானியம், டி,சி,டபுள்யு, சிவா பிளவர்ஸ், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் போன்ற கனரக தொழிற் சாலைகள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த வாயப்பினை பயன்படுத்தி அனைவரும் இந்த தொழில் சங்கம விழாவில் கலந்து கொண்டு பயனுற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்..