SHYAM NEWS 31.05.2019 ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் : காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் வாழ்த்து செய்தி . புனித ரமலான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹூ தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் விளங்குகின்றனர். ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளுகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும், மனோ ஊசலாட்டங்களையும் நீக்கி விடும் என ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப் பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென...