முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

07.05.2023

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.


 தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் உப்பார் ஓடை உபரி நீர் வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே தூர் வாருதல் சூழவியல் பூங்காவிற்கு மண் வழங்குதல் ரூ 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழாவிற்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்;தார்.

   மாவட்டத்தில் பிரதான குளமாக கோரம்பள்ளம் குளம் உள்ளது.  நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் இக்குளம் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888ம் வருடம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும். இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாகவும்,  உபரி நீரை வெளியேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ளனர். பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967இல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு,  சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் 2262 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.      

வெள்ள நேரங்களில் கோரம்பள்ளம் குளத்துக்கு வரும் உபரிநீர், 24 மதகுகள் மூலம் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஓடையில் நெருக்கமாக வளர்ந்துள்ள சீமை உடை மரங்களாலும் தனியார் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் விரைவாக செல்ல முடிவதில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஓடையின் கரைகள் உடைப்பெடுத்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுவது தொடர்கதையாக இருந்தது.    

பொதுவாக கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை பொறுத்தவரை, மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக தண்ணீரை வெளியேற்றுவதும், பயிர்கள் வெள்ளத்தில் சேதமாவதுமே தொடச்சியாக நிகழ்ந்தது. கோடை காலங்களில் அதற்கு நேர் மாறாக, குளம் தண்ணீரின்றி காய்ந்து விடுவதும், பயிர்கள் கருகி விடுவதுமே தொடர்ந்து நிகழ்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட படி பணி தொடங்கப்பட்டது.

நிகழ்;ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், அவைத்தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் பூங்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஒன்றிய குழு துணைத்தலைவரும் பகுதி செயலாளருமான ஆஸ்கர், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுரேஷ், சுந்தரபாண்டியன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜதுரை, முத்துவேல், விஜயகுமார், விவசாய சங்கத்தலைவர் பூபதி, செயலாளர் ரகுபதி, பொருளார் கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, நிர்வாகிகள் தங்கவேல், அகஸ்டின், மதியகழன், முன்னாள் தலைவர்கள் அழகுராஜா, திருமணி, திமுக வட்டச்செயலாளர்கள் வசந்தி பால்பாண்டி, சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், கருப்பசாமி, ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் மாலா சின்கா மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சித்திரைபுஷ்பம், பகுதி துணைச்செயலாளர் கல்பனா, நீர்பாசன சங்க தலைவர் தனலட்சுமி, காலங்கரை செயலாளர் ராஜ், பிரதிநிதி ராமசந்திரன், தாமிரபரணி நதிநீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் உதவி பொறியாளார் பாஸ்டின் வினு, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, அற்புதராஜ், முத்துமாணிக்கம், பாஸ்கர், பால்பாண்டி,  முன்னாள் பகுதி செயலாளர் பொன்னரசு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தாசில்தார் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...