முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி ஏமாற்றும் தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியர்கள்

 ஷ்யாம் நீயூஸ்

19.05.2023

அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி ஏமாற்றும் தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியர்கள்

மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை தவறாக பயன்படுத்தி டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் மகேஷ் என்கிற ஊழியரும் மற்றும் கடைகளில் பணி புரியும் மேற்பார்வையாளர்களும் கூட்டாக இணைந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் லட்சக்கணக்கில் மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பொது மக்களுக்கு தெரிய வரும் போது அமைச்சர் சொல்லி தான் செய்வதாக தவறான தகவலை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரியவறுகிறது. இதனை டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சர் அலுவலகம் கண்காணித்து களை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மா கீழ்நிலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 141 சில்லறை வணிக மதுபான கடைகள் உள்ளன. ஒரு எலைட் மதுபான கடை உள்ளது சுமார் 700 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இக்கடைகளுக்கு மதுபான பெட்டிகளை அனுப்பும் பணியை செய்பவர் மேற்கண்ட மகேஷ் என்கிற நபர் ஆவார். இவர் விலையுயர்ந்த மதுபான பெட்டிகளை ஒரு பெட்டிக்கு 100 ரூபாய் என்ற விகிதத்தில் கடை ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக 10 பெட்டி 20 பெட்டி என ஒவ்வொரு கடைக்கும் அனுப்பி வைத்துவிட்டு விலை உயர்ந்த மதுபான நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியர் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறார் என தெரிகிறது இதன் மூலம் பல லட்ச ரூபாய் ஊழல் நடைபெறுகிறது கண்ணுக்கு தெரியாமல். இதனால் ஏழை எளிய மக்கள் கூலி தொழிலாளிகள் அருந்தும் குறைந்த மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கடைக்கு அனுப்புவதில்லை. காரணம் கேட்டால் பல லட்சத்திற்கும் அதிகமான மதுபானங்கள் உங்கள் கடைகளில் இருக்கின்றன, அதனால் உங்கள் கடைக்கு குறைந்த விலை மதுபானங்கள் கொடுப்பதற்கான வழிமுறை இல்லை என்று கூறுகிறார் என்றும். இதனால் கூலித்தொழிலாளிகள் கட்டிடத் தொழிலாளிகள் குறைந்த விலையில் உள்ள  மது அருந்தும் மக்கள் மத்தியில் சரக்கு கிடைக்காமல் விலை உயர்ந்த சரக்கை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர் என்றும்.  ஏன் மதுபானம் குறைந்த விலையில் இல்லை என கேட்கும் பொழுது கடைகளில் பணி புரியும் அதிமுக ஊழியர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரையும் முதல்வர் பெயரையும் சொல்லி அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது அதனால் இந்த விலை உயர்ந்த மதுபானங்கள் மட்டும்தான் இருக்கின்றன என்று தவறான தகவலை பரப்பி மது அருந்து மக்களிடம் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் மகேஷ் என்பவர் அமைச்சர் பெயரை சொல்லி ஏமாற்றி இது போன்ற கருத்துக்களை கூற வைப்பதும் கடைகளுக்கு தவறான சரக்குகளை அனுப்புவதும் வாடிக்கையாக உள்ளதால் இது அரசுக்கும் மது அருந்தும் மக்களுக்கும் மத்தியில் மிகப்பெரிய கெட்ட பெயரை  ஏற்படுத்தி வருகிறது. மற்றும் அரசுக்கு மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். அரசுக்கு விலை உயர்ந்த மதுபானங்களில் குறைவான வருவாயும் விலை குறைந்த மதுபான பாட்டில்களில் அதிக வருவாயும் கிடைக்கும் மற்றும் பீர் பெட்டிகளை கடைகளில் விற்க விடாமல் கடை மேற்பார்வையாளர்கள் அவர்களுக்கு தேவையான பணத்தை வாங்கிக் கொண்டு பார் உரிமையாளர்களுக்கு மொத்தமாக கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும் தெரிகிறது கடைகளில் இருந்து மொத்தமாக பார்களுக்கு பெட்டி பெட்டியாக அனுப்பும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற ஊழியர்களின் தகாத நடவடிக்கையால் ஒட்டுமொத்த மது பிரியர்களின்  மத்தியில் அரசுக்கு கெட்ட பெயரை எடுத்து ஏற்படுத்தி வருகிறது.  மற்றும் மேற்கண்ட நபர் ஒரு கடைக்கு மதுபான பெறுவதற்கான இண்டன் கொடுக்கும் பொழுது ஆயிரம் ரூபாய் சேர்த்து கொடுத்தால் மட்டுமே சரக்கை அனுப்பும் வழக்கமாக கொண்டு உள்ளார். சுமார் ஒரு கடைக்கு மாதத்திற்கு 8 முதல் 10 இண்டன்கொடுக்கப்பட்டு வருகிறது அப்படி எனில் ஒரு மாதத்திற்கு அவருக்கு குறைந்தபட்சம் ஒரு கடையில் இருந்து பத்தாயிரம் ரூபாய் மது அருந்து மக்களிடமிருந்து பிடுங்கி கொடுக்கும் வேலையை செய்ய தூண்டி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 141 கடைக்கு பத்தாயிரம் என்ற அளவில் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாய் டாஸ்மாக் கீழ்நிலை ஊழியர்களிடம் இருந்து மிரட்டி வாங்கப்படுகிறது மற்றும் அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர் ஒருவருக்கு மாதக்கணக்கு அனுப்பும் பணியை செய்ய தெரியாததால் அந்த பணியை செய்வதர்க்கு   முறைகேடுகள் மற்றும் பணம் கையாடல் செய்ததில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியில் இருக்கும் ஒரு நபர் மூலம் தலைமை அலுவலகத்துக்கு மாதக்கணக்கு  அனுப்புவதற்கு தலா ஒரு கடைக்கு மாதம் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் மிரட்டி வாங்குகின்றனர் இதன் மூலம் சுமார் மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் விற்பனையாளர்களிடம் சுரண்டப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் இந்த சுரண்டலை செய்துவிட்டு பலியை அமைச்சர் மீது நாகூசாமல் சுமத்துகின்றனர் . இவற்றை அமைச்சகம் ஆராய்ந்து அமைச்சருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு சரியாக களை எடுத்து டாஸ்மாக் நிர்வாகத்தை சீராக நடைபெற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை கொண்டு அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்களையும் அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஊழியர்களையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் கீழ்மட்ட மது பிரியர்கள் மத்தியில் அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்படுத்தி விடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பார்களுக்கு மொத்தமாக பீர் கொடுக்காத ஊழியர்களை பார் உரிமையாளர்கள் ஒருமையில் பேசி தாக்க முற்படும் பார் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதில் பார் உரிமையாளர்களும் டாஸ்மாக் அலுவல பணியாளர்களும் கடையின் மேற்பார்வையாளர்களும் பெரும்பாலும் அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசுக்கு கெட்ட பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள் இவற்றிற்கு உடந்தையாக தூத்துக்குடி டாஸ்மாக் தொமுசா தொழிற்சங்க தலைவர்களும் தட்டிக் கேட்காமல் அவர்களோடு கூட்டு வைத்து செயல்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது  என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி உணர்ந்து விரைவில் களை எடுத்து சரி செய்தால் மட்டுமே இந்த அவச் சொல்லிலிருந்து மீள முடியும் என தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...