முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி 6 தொகுதிகளுக்கும் கனிமொழி எம்.பி மக்கள் பணியாற்றுகிறார்.

ஷ்யாம் நீயூஸ்

16.05.2023

 முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி 6 தொகுதிகளுக்கும் கனிமொழி எம்.பி மக்கள் பணியாற்றுகிறார். தூத்துக்குடி  திமுகவினர்  தெரிவித்தனர்



தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறவேண்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க முதல்கட்டமாக நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்டமாக மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் இளைஞர் அணி சார்பில் திராவிடமாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். என்று உத்தரவிட்டதையடுத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின் படி

     தூத்துக்குடி அன்னை இந்திராநகர் பகுதி இளைஞர் அணி சார்பில் ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். 3வது வார்டு வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், அவைத்தலைவர் ராஜசேகர், துணைச்செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

     மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பேசுகையில் கழகத்தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆணையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஆலோசனையின்படி நடைபெறுகின்ற திராவிட மாடல் ஆட்சி 2021ல் மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடுமையாக இருந்த காலக்கட்டம் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச முடியாமல் உறவினர் வீட்டுக்கு செல்லமுடியாமல் பரிதவித்த காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தமிழக மக்களை பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது என்பதை உணர்ந்து இந்தியாவில் எந்த முதலமைச்சரும் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது கிடையாது ஆனால் நம்முடைய முதல்வர் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். என்று உத்தரவிட்டு ஆக்ஜிசன் தட்டுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டு அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்கி தமிழக மக்களின் நலனை பாதுகாத்தார். பின்னர் இரண்டு கட்டமாக நான்காயிரம் வழங்கப்பட்டது. பால்விலை ரூ3 குறைவு, பெண்களுக்கு இலவசபேருந்து பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிப்பு உதவித்தொகைக்கு ஆயிரம் முதியோர் உதவி தொகை  மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க 30 ஆயிரம் கோடி ஓதுக்கீடு விவசாய கடன் நகைக்கடன் தள்ளுபடி, என்று சாதனை பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் அடைய வில்லை. தற்போது தொழில்வளர்ச்சி வேலைவாய்ப்பு என வழங்கப்பட்டு செயல்படாமல் இருந்த நலவாரியங்கள் அனைத்தும் முறையாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கப்படுவது மட்டுமின்றி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலவிடப்பட்டது. இந்த பகுதியில் கடந்த காலங்களில் மழையால் முத்தம்மாள் காலணி, ரஹ்மத்நகர், தனசேகர் நகர், ஹவுசிங் போர்டு காலணி மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வராவதற்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். முதல்வரானபின்பும் ஆய்வு செய்து இப்போது அந்த குறைபாடுகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார், ஆனால் இந்த பகுதியில் குடியிருக்கும் எம்.பி, ஒன்றுமே செய்யவில்லை ஆனால் கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்க பணி செய்யவது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார். இந்த ஆட்சியின் சாதனையும் தொடரவேண்டும் கனிமொழி எம்.பியின் பணியும் நமக்கு தேவை என்பதை உணர்ந்து வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்ற பெற வேண்டும் இந்த தொகுதியில் கனிமொழி எம்.பிக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். என்று பேசினார். தலைமை பேச்சாளர்கள் பாலகிருஷ்ணன், கமலா எப்ரேம், உள்பட பலர் பேசினார்கள்.

      கூட்டத்தில் தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ராமசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் அம்பாசங்கர், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், பூவேஸ்நாதன், செல்வகுமார், ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், பகுதி துணைச்செயலாளர் மகேஷ்செல்வம், மகளிர் அணி அமைப்பாளர் ரமணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பௌஷியாஅபுதாகீர், மாணவரணி அமைப்பாளர் அன்புமணி, துணை அமைப்பாளர் பூமாரி, கவுன்சிலர் காந்திமணி, நிர்வாகிகள் விக்னேஷ்வரன், குலாம் அலிஷா, கமாலுதீன், சேது என்ற சேந்தையன், நெல்சன், உள்பட பல்வேறு அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், நன்றியுரையாற்றினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...