திருமந்திர நகர் சிவன் கோயில் தேரோட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் திருத்தேர் வடம்படித்து தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு
ஷ்யாம் நீயூஸ்
திருமந்திர நகர் சிவன் கோயில் தேரோட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் திருத்தேர் வடம் படித்து தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு
திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்(03.05.2023) இன்று நடைபெற்றது. சிறிய தேரில் ஸ்ரீ மகா கணபதி முருகப்பெருமான் வீற்றிருக்க பெரிய தேரில் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் வீற்றிருக்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பாக சிவன்-பார்வதி வேடமணிந்த சிறுமிகளும், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ராஜ மேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமி மேளம், தப்பாட்டம், சிவபூதகண வாத்தியங்களுடன் தேவார இன்னிசையுடன் சிலம்பாட்டம் ஆடியபடி தேரின் முன்பு சென்றனர்.