ஷ்யாம் நீயூஸ்
01.05.2023
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஏரல் காந்தி சிலை முன்பு அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
தூத்துக்குடி ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் இடிந்து ஒன்றரை ஆண்டுகள் காலம் ஆகிய நிலையில் புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டித் தர வேண்டும்,ஏரல் பகுதியில் பல ஆண்டுகளாகஇயங்கி வந்த பத்திரபதிவு அலுவலகத்தை வேறுஇடத்திற்கு மாற்றம் செய்யாமல் ஏரல் தாலுகா அலுவலக வளாகத்திலேயே புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள வாரச்சந்தையை ஏரல் ஆற்று மேம்பாலம் அருகே உள்ள இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் உண்ணாவிரதம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்று தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தெரிவித்தார்
இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை உடனடியாக கட்டி தர வேண்டியும், பத்திர பதிவு அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.