பிஜேபிக்கு அடிமையாக இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்யாத கட்சி அதிமுக தான் திமுக தெருமுனை பிரச்சாரத்தில் ராமஜெயம் கடும் தாக்கு
ஷ்யாம் நீயூஸ்
19.05.2023
பிஜேபிக்கு அடிமையாக இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்யாத கட்சி அதிமுக தான் திமுக தெருமுனை பிரச்சாரத்தில் ராமஜெயம் கடும் தாக்கு
தூத்துக்குடி மாநில இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் தெற்கு மாவட்டம் கருங்குளம் தெற்கு ஒன்றியம் ஆழ்வார் குளத்தில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டு சாதனைகளை குறித்து தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் பேசுகையில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்று திமுக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் பிஜேபிக்கு அடிமையாக இருந்து தமிழ்நாட்டை கடனில் தத்தளிக்க விட்டு செய்தது. அந்த நிதி பற்றாக்குறையையும் ஓரளவு சரிசெய்து முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளம் மூலம் பரப்பி வருகின்றனர். இரண்டு ஆண்டு சாதனையை தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுகின்றன. முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கொரோனா காலக்கட்டத்தில் 4 ஆயிரம் உதவித்தொகை பால்விலை குறைப்பு இலவச பேருந்து பயணம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல அறிவிப்பு செய்தார். ஏன் இந்த ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் விட்டோம் என்று மக்கள் குறைப்பட்டு கொள்ளும் அளவிற்கு சாதனைகள் செய்துள்ளார்.
தலைமை செயலகத்தில் மட்டும் இருந்;து கொண்டு பணியாற்றிய முதல்வர்கள் உண்டு ஆனால் நம் முதல்வர் அந்த பணி மட்டுமின்றி அறிவித்த திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைகின்றதா என்று மாவட்டம் தோறும் ஆய்வுகளையும் மேற்கொள்கிறார். கல்வி உதவித்தொகை, வீடு தேடி மருத்துவம், சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி 89ல் கலைஞர் தொடங்கிய மகளிர் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் 2006 முதல் 2011ல் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மாவட்டம் தோறும் சூழல் நிதி வழங்கினார். 10 ஆண்டுகளாக அதிமுக எந்த உதவியும் செய்யவில்லை. மகளிர் சுய உதவிக்குழு கடன்ரத்து, மறுபடியும் 30 ஆயிரம் கோடி கடன்வழங்க ஓதுக்கீடு ஆப்பிள் ஐ தொழில் நிறுவனம் வாரத்தில் நான்குநாட்கள் விடுமுறை அளித்து மத்த நாட்களில் 12 மணி நேரம் வேலை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைசட்டத்தையும் திமுக தொழிற்சங்கமே எதிர்ப்பு தெரிவித்தது இதுதான் ஜனநாயகம் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
கலைஞர் ஆட்சியில் என்னற்ற சாதனைகளை பெண்களுக்கு வழங்கி 33 சதவீதம் உள்ளாட்சியில் வழங்கினார். முதல்வர் ஆட்சியில் 40சதவீதம் அரசுப்பணி தற்போது வெளிவந்துள்ள 12 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுவும் அரசு பள்ளியில் பயின்றவர்கள். இவர்களது மேல்படிப்பு மருத்துவம் பொறியியல் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இங்கு எம்.பியாக உள்ள கனிமொழி கலைஞரின் மகளாகவும் முதல்வரின் தங்கையாகவும் இருந்து உங்களுக்கு நல்ல பணியை செய்து வருகிறார்.
பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கருப்பு பணத்தை மீட்டு நம்முடைய வங்கி கணக்கில் 15 லட்சம் தருவதாக கூறினார்கள் எதுவும் தரவில்லை ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றார்கள் அதுவும் இல்லை. ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில்கள் பாதிப்பு ஜாதிமதம் நாம் பார்ப்பதில்லை. பிஜேபி இந்து நாடு என்று சொல்லி பிரிவினையை ஏற்படுத்துகிறது. குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் பெண்கள் மாயம் என்கிறார்கள் கண்டுபிடிப்பு இல்லை. பல மாநிலங்களில் பாலியல் புகார் அதிகம் உள்ளன.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொண்டு வந்ததே திமுக தான் அனைத்து மதத்தினருக்கும் எல்லா நன்மைகளையும் திமுக ஆட்சியில் கிடைக்கிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி தூத்துக்குடி விமான நிலையம் துறைமுகம் என எல்லா வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அவருக்கு வெற்றியை வழங்கி மேலும் சாதனை பணிகள் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் கரூர் முரளி, கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், கருங்குளம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கோமதி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ராஜேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.