முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

 ஷ்யாம் நீயூஸ்

21.05.2023

இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ  பேசினார்.


   தூத்துக்குடி மாநில திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.

     தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான மிக்கேல் அருள் ஸ்டாலின் தலைமை வகித்தார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார்.

      பின்னர் சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் கொரனோ பாதிப்பு அதிகம் இருந்தது. அதனால் மக்கள் முடக்கம் தொழில் பாதிப்பு இருந்த நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் வாக்குச்சாவடி என பல முன்னெடுப்பு மூலம் படிப்படியாக குறைந்தது. அந்த நேரத்தில் 2 கோடியே 16லட்சம் ரேஷன்கார்டு உள்ளவர்களுக்கு நான்காயிரம் உதவித்தொகை வழங்கி ஆவின் பால் ரூ 3 விலை குறைக்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து அரசு 210 சாதனைகளை தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏழ்மையில் உள்ள மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பை தொடர்கின்றன. இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 கோடிபேர் பயனடைந்துள்ளனர். சர்க்கரை வியாதி பிரஸர், உள்ள முதியவர்களுக்கு பரிசோதனை செய்து  மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது.

இல்லம் தேடி கல்வி மூலம் மாலை நேர கல்வி வழங்கப்படுகிறது. இந்த பகுதி கல்லூரி அருகிலுள்ள சாலை உள்ளிட்டவைகள் ஓருகோடியே 31லட்சம் அமைக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு தனிபட்ஜெட் வழங்கப்பட்டு ஒன்றரைலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் குடிநீர் மற்றும் சாலை பணிகள் என பல நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் 18 மணி நேரம் நாட்டுக்காக உழைக்கிறார். அது அவரது சக்திக்கு மீறியதாகும் நமது மொழி என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான். அதே போல் காலை உணவு திட்டத்தின் மூலம் 30 சதவீதம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு   50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். அதே போல் அரசு வேலைவாய்ப்பு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1989ல் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கு முதல்வர் ஆட்சியில் கடன் வழங்குவதற்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேற்றமடைந்து வருகின்றன. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் நடைபெறுகின்றன. எங்களிடம் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் கவனத்திற்கு எடுத்துச்சென்று படிப்படியாக அதை தீர்த்து வைத்து வருகிறோம் ஓரு கிராமம் வளர்ச்சிக்கு பல கோடிகள் தேவைப்படுகிறது. அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்ற உங்களோடு இணைந்து உழைப்போம். நமக்கு கிடைத்திருக்கின்ற கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஆகியோர் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகின்றனர். 2024ல் நடைபெறவுள்ள தேர்தலில் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தளபதி தான் அடையாளம் காட்டுவார். இங்குள்ள 64 குக்கிராமங்களிலும் இருக்கின்ற 40 ஆயிரம் வாக்குகளின் 30 ஆயிரம் பதிவாகும். அதில் 27 ஆயிரம் வாக்குகள் உதயசூரியன் சின்னத்திற்கு கிடைக்க வேண்டும் அதற்கு அனைவரும் திமுக அரசின் சாதனைகளை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும். முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார். தலைமை பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன்,  மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாணவரணி துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சப்பாணி முத்து, சிவக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன் ராமசந்திரன், வசந்தகுமாரி, பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், முத்துமாலை, ஆனந்தி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ் ஆம்ஸ்ட்ராங், ஜேம்ஸ், குணா, கார்த்திக், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, காமராஜ,; ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், பாண்டியம்மாள், உமாமகேஸ்வரி, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ்,      நிர்வாகிகள் ஜோஸ்பின்மேரி, மரிய ஜெயரூபி, வளர்மதி, சிவபாலா, அங்காளஈஸ்வரி, நூர்ஜஹான், பாலசுந்தரி, இசக்கியம்மாள், எபன், சூரி, ஈஸ்வரி, மாரியம்மாள் மரியானுஷ், அம்புரோஸ், ராயப்பன், சந்தனராஜ், ஆனந்தகுமார், அழகுசேகர், சுதாகர், கௌதம், குரூஸ், மாரியப்பன், ஜெயசீலன்,  மைக்கேல்ராஜ், ஜெயசிங்,  ஆரோக்கியம், சிலுவை, மாரிமுத்து, மரியதாஸ், ரொசாரி, சேவியர், ஆசைத்தம்பி, மணி, ரவீந்திரகுமார், பெரியமாரிமுத்து கார்த்திக், விக்கி, முனியசாமி, முருகன், ஆனந்த், குணாபாஸ்கர், தங்கமாரிமுத்து, கண்ணன், சோனாராஜன், ராஜேந்திரன், திமுக கிளைச்செயலாளர்கள் காமராஜ், ஜெபராஜ், ராமசந்திரன், சிவபெருமாள,; வடிவேல், சந்தனகுமார், காஜாமைதீன், பாலுநரேன், பாரதிராஜா, இசக்கிமுத்து, கனி, மகாராஜா, அன்புரோஸ், சுபாஷ், தங்கபாண்டி, பழனி, கருப்பசாமி, முத்து, மாடசாமி என்று முத்துராஜ், பொன்ரத்தினம், திருமணி, ஆனந்தராஜ், காசிலிங்கம், பொன்னுச்சாமி, இம்மானுவேல், தனபாலன்,  அந்தோணி, பென்சிகர், ஆறுமுகபாண்டி, சந்திரசேகர், முத்துக்குமரன், வேல்ராஜ், மாரிமுத்து, குருசாமி, வெற்றிவேல், கதிர்வேல், துரை, சேகர், ஜெயபாண்டி, சந்திரசேகர், ரத்தினகுமார், அருண்ஜெகன், சரவணன், பிரபாகர், உத்திரம், பேச்சிமுத்து, முருகராஜ், முருகன், ராமமூர்த்தி, உலகநாதன், கிராஸ் என்ற ஞானப்பிரகாசம், நெல்சன், ஜான்சன், நாராயணமூர்த்தி; உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற உறுப்பினரும் கிளைச் செயலாளருமான ஜேசுராஜா நன்றியுரையாற்றினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...