ஷ்யாம் நீயூஸ்
29.05.2023
தூத்துக்குடி புதுக்கோட்டை பி எஸ் பி பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை TDTA PSP மேல்நிலைப் பள்ளியில் 1999 முதல் 2006 ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
விழாவில் 17 ஆண்டுக்கு முன் பள்ளியில் படித்த நினைவுகளை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர் தலைமை ஆசிரியர் தேவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் பள்ளி தாளாளர் நீகர்பிரின்ஸ் கிப்ஸ்சன் முன்னிலை வகித்தார் .நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ்,தங்கராஜ்,பொன்னுதுரை, ஆசிர்ராஜாசிங் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் பிரேமா,டேசி,லூர்துசாமி,ஜான்விக்டர்,மல்லிகா,ரோஸ்லின்,சுமதிபிலிப்,மற்றும் அன்னாள்,செல்வராஜ்,செல்லதாய்,பியூலா,பூரணி,எழிலரசி,பிரதிபா,நிர்மலா,ஆல்வின், ஜெனிபா,மற்றும் பழைய மாணவர்கள் மாணவிகள் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தாங்கள் படித்த புதுக்கோட்டை பி எஸ் பி மேல்நிலைப் பள்ளிக்கு நுழைவு வாயில் கட்டுவதற்காக ரூபாய் 50ஆயிரம் நன்கொடை வழங்கினார்கள்.