முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வி ஏ ஓ கள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பணி செய்வதில்லை கோட்டாட்சியர் வேதனை .

ஷ்யாம் நீயூஸ்

06.05.2023

தூத்துக்குடி வி ஏ ஓ கள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பணி செய்வதில்லை கோட்டாட்சியர் வேதனை .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட  கோவில்பட்டி, எட்டையாபுரம் ,விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் 

இவர்களுக்கு கூடுதல் பணியாக அந்தந்த கிராமங்களில் வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஆதார் அட்டை வங்கி கணக்கு ஆகியற்றுடன் கணினியில் ஏற்றுவதற்கு வாய்மொழி உத்தரவாக ஆணை இடப்பட்டதாக தெரிகிறது .ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியினை சரிவர செய்யாமல் விவசாயிகளின் விவரங்களை கணினி ஏற்றுவதில் மெத்தனப்போக்கு  காட்டி வருவதாக கோட்டாட்சியர் மகாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்

எட்டயபுரம் தாலுகாவில் 49 ஆயிரத்து 500 விவசாயிகள் விவரங்களை கணினியில் பதிவு செய்யாமலும், ஓட்டப்பிடாரத்தில் 86 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளின் விவரங்கள் , விளாத்திகுளத்தில் ஒரு லட்சத்து 19000 க்கும் அதிகமான விவசாயிகளின் விவரங்களையும்  கோவில்பட்டியில் 57,000 விவசாயிகளின் விவரங்களையும், கயத்தாறில் 80,000 விவசாயிகளையும்  கணினியில் பதிவு செய்யாமல் இருந்துருவதாகவும் தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா திருச்செந்தூர் தாலுகா ஏரல் தாலுகாவை ஒப்பீடுகையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். விவசாயிகளை கணக்கெடுத்து கணினியில் பதிவேற்றம் செய்யும் வேலையை ஒரு கிராம நிர்வாக அதிகாரி ஒரு நாளைக்கு 100 பதிவேற்றம் செய்தால் கூட இந்நேரத்தில் தங்களது இலக்கை நிறைவேற்றி இருக்கலாம் அலுவலகத்தில் உட்கார்ந்து அப்படி என்னதான் வேலை செய்கிறீர்களோ? நான் பார்த்ததிலே கோவில்பட்டி டிவிசன் படும் மோசமாக உள்ளது நானும் பலமுறை தாசிதர்களிடம் எடுத்து கூறிவிட்டேன் எந்த பலனும் இல்லை விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய காலதாமதம் ஆனால் வரும் 16ஆம் தேதி நடக்க இருந்த சமபந்தி இருபதாம் தேதிக்கு அப்புறம் நடந்தாலும் பரவாயில்லை அதுவரை எந்த கோப்புகளும் கையெழுத்து இட மாட்டேன் நான் பார்த்ததிலே கோவில்பட்டி டிவிஷனில் உள்ள தாலுகா அலுவலகங்கள் படும் மோசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தனது பேச்சில் கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசி உள்ளதாகவும் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி எங்களுக்கு அரசாணைப்படி கொடுக்கப்படவில்லை என்றும் வாய்மொழி உத்தரவாகவே இந்த உத்தரவு செயல்படுத்த சொல்வதாகவும்   வேதனைப்படுகிறனர். பொதுமக்களுக்கு சேவை செய்வது அரசு ஊழியர்களின் கடமை.  தாங்கள் தங்கள் பணிகளை சரிவர செய்யாமல் மேலதிகாரி மீதும் அரசியல்வாதிகள் மீதும் பழி சுமத்துவதை விட்டுவிட்டு. மகாத்மா காந்தி  இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என கூறியுள்ளார் அதன் அடிப்படையில் விவசாயிகளின் விவரங்களை பதிவிடும் பணியை முடித்து தர வேண்டும் என்றும் அரசு அலுவலர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் விவசாயிகளை கணக்கெடுத்து பதிவேற்றும் செய்யும் பணியினை வருவாய்த்துறை அலுவலர்கள் விரைவாக பதிவேற்றம் செய்து கொடுத்தால் தான் விவசாயிகள் தங்களுக்கு வரவேண்டிய மானியத்தை பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்றும்  விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...