ஷ்யாம் நீயுஸ்
19.05.2023
நாடாள வந்த என்னை நாட்டாமையாக ஆக்கி விடாதீர்கள் தூத்துக்குடியில் சீமான் பேச்சு .
நான் நாடு ஆளுவதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன் நாம் தமிழர் கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் போடும் உட்கட்சி சண்டைக்கு நாட்டாமை பண்ணும் அளவுக்கு என்னை ஆக்கி விடாதீர்கள் என்று தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
நாம் தமிழர் இன எழுச்சி மாநாடு நேற்று தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சாமி பல்க் அருகில் நடைபெற்றது மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் விடுதலைப் புலிகள் மீது உள்ள தடைகளை நீக்க வேண்டும் கச்சத்தீவை இந்திய அரசு மீட்டு தர வேண்டும் இலங்கையால் தமிழர்கள் பகுதியில் புத்தர் கோயில்களை சிங்கள அரசு கட்டி வருகிறது அவற்றை தடுக்க வேண்டும் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு ஏன் இலங்கை தமிழ் இன மக்களுக்கு குடியுரிமையை கொடுக்க மறுக்கிறது. இனத்தின் விடுதலை ஒன்றுதான் நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்றும், கொழுப்பு எடுத்து விஷ சாராயம் குடித்து இறந்தவருக்கு அரசு 10 லட்சம் கொடுத்தது தவறு அதிமுக திமுக இரண்டு கட்சிக்கும் வளர்ந்து விட்டது இனி அவர்களால் வளர முடியாது நாங்கள் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். நான் ஜூன் மாதம் 13ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன் நம் தமிழர் கட்சியில் நடந்து வரும் உட்கட்சி சண்டைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் நான் நாடாள நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளராக உள்ளேன் கட்சிக்குள் நீங்கள் போடும் சண்டையைக்கு நாட்டாமை பண்ணி வைக்க வைத்து விடாதீர்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.