SHYAM NEWS
11.02.2020
ஏதோ கரண்ட் ஷாக்குன்னு சொன்னீங்களே.. எப்படி இருக்கு அமித் ஷா ஜி? போஸ்டர் ஒட்டி கலாய்க்கும் ஆம் ஆத்மி
டெல்லி: இதில் கரண்ட் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, போட்டோ மீது எழுதி போஸ்டர் அடித்து ஒட்டி கலாய்த்து வருகிறார்கள் ஆம் ஆத்மி தொண்டர்கள். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி கட்சி பயணித்துக்கொண்டு உள்ளது. இதையடுத்து டெல்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் டெல்லியில், ஷாஹீன் பாக் ஒரு தேர்தல் பிரச்சினையாக பாஜகவால் மாற்றப்பட்டது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆம் ஆத்மி கட்சியைத் தாக்கிபேசினார். ஒரு கூட்டத்தில் அமித் ஷா, 'டெல்லியின் ஈ.வி.எம்களின் பொத்தானை மிகவும் சத்தமாக அழுத்தவும். ஷாஹீன் பாக்கில் மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி அதிர வேண்டும் என அமித் ஷா பேசினார். அமித் ஷா முதல் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாஜக தலைவரும் ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி நிதியுதவி அளித்தது என்று குற்றம்சாட்டினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பல கூட்டங்களில் "நீங்கள் ஷாஹீன் பாக் மக்களுடன் இருக்கிறீர்களா அல்லது பாரத் மாதா என்ற முழக்கத்தை எழுப்பியவர்களுடன் இருக்கிறீர்களா என்று தேர்தலில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.