வடமொழியில் இறைவணக்கம் பாடி தூத்துக்குடிசுப்பையா வித்யாலயம் பள்ளியில் ராஜ்ஜிய புரஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது !
05.02.2020
வடமொழியில் இறைவணக்கம் பாடி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் ராஜ்ஜிய புரஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது .
தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலை பள்ளியில் பாரத சரண சாரணியர் இயக்கம் ராஜ்ஜிய புரஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது .இதில் தூத்துக்குடியில் உள்ள சரண சாரணியர் கலந்துகொண்டனர் .விழா வடமொழியில் இறைவணக்கம் பாடி ஆரம்பிக்கப்பட்டது பின்பு தமிழ்தாய் வாழ்த்து பாடினார் மற்றும் பரதம் நடனமாடி மாணவிகள் விருந்தினர்களை வரவேற்றனர் .இதில் மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு விருந்தினராக கந்துகொண்டார் .எஸ் தர்மராஜ் பி .முருகானந்தம் ,எ .மங்கள்ராஜ் .முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி , மாவட்ட கல்வி அலுவலர் இ. வசந்தா அகியோர்வாழ்த்துறை வழங்கினர் . மாவட்ட ஆணையர் சாரணர் பிரிவு ஆர் .சண்முகம் நன்றியுரையாற்றினார் .