ஷ்யாம் நீயூஸ்
18.02.2020
சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க தூத்துக்குடி மாவட்ட அ தி மு க மாவட்ட கவுண்சிலர் ஆட்சியரிடம் வேண்டுகோள் !
18.02.2020
சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க தூத்துக்குடி மாவட்ட அ தி மு க மாவட்ட கவுண்சிலர் ஆட்சியரிடம் வேண்டுகோள் !
- தூத்துக்குடி மாவட்ட 11 வது வார்டு உறுப்பினர் பாலசரஸ்வதி நயினார் .இவர் தனது மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு காசேரி கிராம ஊராட்சியில் ஜெனீபா இந்தியா என்ற தனியார் மீன் பவுடர் .மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசுபாட்டை செய்துவருகிறது . இந்த ஆலை அழுகிய மீன்களை பதப்படுத்தி மீன் எண்ணெய் ,மீன் பவுடர் தயாரிக்கும்பொது துர்நாற்றம் வீசுகிறது அது காற்றின் திசைக்கு ஏற்ப சுழன்று வீசுவதால் அருகில் இருக்கும் கிராம மக்களால் சுவாசிக்க முடியவில்லை. .அருகில் உள்ள கிராமங்களில் 1000 க்கும் மேற்பட்ட பாமரமக்கள், முதியோர்கள் ,பச்சிளம் குழந்தைகள் போன்றோர்கள் சுவாச பிரச்சனையால் அவதிப்படுகின்றனர் மேலும் ஆஸ்துமா போன்ற கோளாறுகள் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் .மேலும் ஆலையில் இருந்து வெளிவரும் மீன் கழிவு நீர் சுற்றிலும் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் கலப்பதால் மண்ணின் தன்மை குறைந்து வேளாண்மை பாதிக்கப்படுகிறது மற்றும் விளைநிலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு தோல் அரிப்பு நோய்கள் ஏற்படுகிறது மேலும் ஆலை இயக்குவதற்கு ஆற்றல் விறகுகளை எரிப்பதால் காற்றானது மேலும் மாசடைந்து நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் பரவும் என மக்கள் அச்சப்படுகின்றனர் ஆகவே மக்கள் நலனை பேணிக்காத்திட ஜெனீபா இந்தியா தனியார் நிறுவனத்தை உடனடியாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ உத்தரவிடவேண்டும் என்று அ தி மு க மாவட்ட கவுண்சிலர் பாலசரஸ்வதி நயினார் ஆட்சியரிடம் மனு கொடுத்தார் .