ஷ்யாம் நீயூஸ்
05.02.2020
புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஒரே வழக்கு, ஒரே தண்டனை என்பதால் தண்டனையை தனித் தனியாக நிறைவேற்ற முடியாது என்று நீதிபதி சுரேஷ்குமார் கெய்ட் தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய தில்லி உயர்நீதிமன்றம், இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ் கெய்ட், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று உத்தரவிட்டு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.