தூத்துக்குடியில் காவல்நிலையம் முற்றுகை !டி எஸ் பி பிரகாஷ் சாமர்த்தியத்தால் மாவட்ட எஸ் பி அலுவலகம் தப்பியது !
16.02.2020
தூத்துக்குடியில் காவல்நிலையம் முற்றுகை !டி எஸ் பி பிரகாஷ் சாமர்த்தியத்தால் மாவட்ட எஸ் பி அலுவலகம் தப்பியது !
சி ஏ ஏ ,என் ஆர் சி க்கு எதிராக நாடுமுழுவதும்பொதுமக்கள் ,அரசியல் கட்சிகள் மூலம் போராட்டம் நடைபெற்று வருகிறது .இதன் தொடர்ச்சியாக நேற்றைய முன்தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல்த்துறை தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
காவல்நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது .
தூத்துக்குடியில் நேற்று (15.02.2020) காலை 11 மணி அளவில் சி ஏ ஏ ,என் ஆர் சி எதிராக போராடிய பொதுமக்களை காவல்த்துறை தடியடி நடத்தியதை கண்டித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பளார் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் நினைத்தனர் . ஆனால் அதை முன்கூட்டியே அறிந்த தூத்துக்குடி டி எஸ் பி பிரகாஷ் போராட்ட தலைவர்களை அழைத்து பேசி மாவட்ட கண்காணிப்பளார் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தை கைவிட செய்தார் .பின்னர் தூத்துக்குடியில் தெற்கு காவல்நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது .முற்றுகை போராட்டத்தில் சிறு வன்முறைகூட நடக்கவில்லை தேசிய கொடியை ஏந்திய மக்கள் சி ஏ ஏ ,என் ஆர் சி சட்டத்தை திருப்ப பெறவேண்டும் எனவும் தடியடி நடத்திய காவலர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும் எனவும் கோஷமிட்டனர் .போராட்டத்திற்கு டி எஸ் பி பிரகாஷ் சிறந்த பாதுகாப்பு வழங்கி இருந்தார் .போராட்டம் முடிந்தவுடன் போராட்டம் நடந்த இடத்தை இளைஞர்கள் சுத்தம் செய்தனர் .டி எஸ் பி பிரகாஷின் சாமர்த்தியமான செயலால் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பளார் முற்றுகை போராட்டம் தப்பியது .இந்த சாமர்த்திய செயலால் டி எஸ் பி பிரகாஷை மக்கள் பாராட்டி வருகின்றனர் . இதுபோன்ற சாமர்த்திய செயலை அப்போது இருந்த அதிகாரிகள் செய்திருந்தால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் தடுக்கப்பட்டிருக்கும் 13 க்கும் மேற்பட்ட உயிர் பலி தடுக்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறினர் .சி ஏ ஏ ,என் ஆர் சிக்கு எதிராக மற்றும் ஒரு போராட்டம் வி வி டி சிக்னல் அருகில் அன்று மாலை நடைபெற்றது இதில் சி பி ஐ கட்சியை சார்ந்த கனகராஜ் கலந்துகொண்டார் .