அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லாத பி ஆர் ஓ ?தூத்துக்குடியில் தரை தட்டியது அ தி மு க வாக்கு வங்கி ?
04.02.2020
அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லாத பி ஆர் ஓ ?தூத்துக்குடியில் தரை தட்டியது அ தி மு க வாக்கு வங்கி ?
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . அதில் அ தி மு க கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதே வேலையில்
தி மு க உள்ளாட்சி தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை ஆனால் தி மு க அதிகமான இடங்களை கைப்பற்றியது .குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் அ தி மு க கோட்டை என்றே கூறலாம் இதில் ஓட்டப்பிடாரம் இடை தேர்தலில் அ தி மு க தோல்வி அடைந்ததை அ தி மு க தொண்டர்களால் இன்னமும் ஜீரணிக்கமுடியாமல் உள்ளனர் .மற்றும் தமிழகத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நந்தீப் சந்தூரி மிக சிறப்பாக செயல்பட்டார் அதற்காக பல விருதுகளையும் பெற்று உள்ளார் .தற்போதும் அரசு செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே என்பதுபோல் பம்பரமாக சுழன்று வருகிறார் .ஆனால் செயல்படுத்திய அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய தூத்துக்குடி மக்கள் தொரடர்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் சரியாக செயல்படவில்லை எனவும் அதனால்தான் ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி யூனியன் சேர்மன் பதவியை இழந்தோம் எனவும் தூத்துக்குடி மாவட்டத்தில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் இருந்தும் தோல்வி எனவும்.
அரசு நலத்திட்டங்கள் முழுவதும் பொதுமக்களிடம் கொண்டுசெல்லாத பி ஆர் ஓ மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும். தரை தட்டிய தூத்துக்குடி மாவட்ட அ தி மு க வாக்கு வங்கியை மீண்டும் கட்டி எழுப்ப விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் தனி கவனம் செலுத்தவேண்டும் எனவும்
ஓட்டப்பிடாரம் அ தி மு க தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர் .