SHYAM NEWS
10.02.2020
தூத்துக்குடிக்கு மாநிலஅளவிலான நீச்சல் போட்டியில் இரண்டு முதலிடம் பெற்று தந்த பள்ளி மாணவன் !
மாநிலஅளவிலான நீச்சல் போட்டியில் குரூப் 4 அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் பி.எம்.சி பள்ளியை சார்ந்த 6ம் வகுப்பு மாணவன் எஸ்.மெல்வின் ராஜு மாநில அளவில் முதல் மாணவனாக வெற்றி பெற்றுள்ளார்.
மாநில அளவில் நடந்த 2019-2020 க்கான நீச்சல் போட்டிகள் மதுரையில் நடைபெற்றது நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் எஸ்.மெல்வின் ராஜு மாநில அளவில் 50 மீட்டர் நீளத்தை 47.38 வினாடிகளிழும் ,25 மீட்டர் நீளத்தை 21.43 வினாடிகளிழும் கடந்து முதல் மாணவனாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று உள்ளார் .இவர் தூத்துக்குடி பி &டி காலனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜின் மகன் ஆவர் .வெற்றிபெற்ற மாணவன் கோரம்பள்ளம் குளத்தில் எதிர் நீச்சல் அடித்து பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இவருக்கு ஜோசப்,புதுராஜா,மைக்கேல் போன்றோர் பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் மையப் பகுதியாக மதுரை இருப்பதால் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்துள்ளது. நீச்சல் வீரர்கள் அனைவரும் இங்கு வந்து செல்ல வசதி செய்யப்பட்டது.. இதுவரை 14 முறை மாநில நீச்சல் போட்டியை நடத்தும் வாய்ப்பை மதுரை நீச்சல் சங்கத்திற்கு வழங்கி இருக்கிறோம் .இந்த போட்டி வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக 5 வயது முதல் 21 வயது வரையில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு நடத்தப்பட்டது.. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது . வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நீச்சல் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது’ என்றார். அப்போது மதுரை மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின், செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.