தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 48 லட்சம் மதிப்பில் சேவை மையம் கட்டிட பூமி பூஜை -ஆட்சியர் தொடக்கி வைத்தார் .
SHYAM NEWS
14.02.2020

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டிடம் கட்ட ரூபாய் 48 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டது அதன்படி இன்று (14.02.2020) அக்கட்டிடத்திற்கு பூமிபூஜை நடைபெற்றது . தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி முதல் செங்கல் எடுத்து வைத்து ஆரம்பித்து வைத்தார் .இதில் மருத்துவர் அறை ,சமையல் அறை ,5 படுக்கைகொண்ட சிறப்பு பிரிவு ,மற்றும் மனநிலை சம்பந்தமாக அறிவுரை வழங்கும் அறை ,பணியாளர்கள் அறை ,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் சேவை மையம் ஆகியவை இதன் சிறப்பு அம்சம் ஆகும் .இதில் அரசு மருத்துவமனை டீன் (பொ ) மருத்துவர் பாவலன் ,உதவி உறைவிட மருத்துவர் ஜெயபாண்டி ,மாவட்ட சிறப்பு பொது நலன் அதிகாரி தனலெட்சுமி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ,உதவி பொறியாளர்கள் வெள்ளைச்சாமி ராஜ் , அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் .