தூத்துக்குடி பொதுப்பணித்துறை நீர்வளம் கோரம்பள்ளம்
ஆறு வடிநில அலுவலகத்தில் பணிபுரியும் செயற் பொறியாளர் கங்காதரன் துணை
செயற்பொறியாளர் சங்கர் உதவி பொறியாளர் உருவாட்டி மற்றும் ஆதிநாதன் ஆகியோர்
கட்டிடம் கட்டாமல் பணம் கையாடல் செய்தாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
கடற்கரை பாதுகாப்பு பணிக்காக தமிழக அரசு பல கோடி
ரூபாய் ஒதுக்கியது .இதில் துண்டில் வளைவு அமைப்பது முக்கிய பணியாகும் வீரபாண்டிய
பட்டினம் கல்லாமொழி பெரியத்தாளை ஆகிய பகுதிகளில் 45
கோடி ரூபாய் செலவில் துண்டில் வளைவு
அமைக்கப்பட்டது .மீதி இருக்கும் பணத்தை எப்படி சுருட்டலாம் என்று திட்டம்
போட்டதில் மாட்டிக்கொண்டனர் .தூத்துக்குடி பொதுப்பணித்துறை வளாகத்திற்குள் சுமார் 150 வருட பாரம்பரியம் மிக்க கட்டிடத்தை பொதுப்பணித்துறை
கட்டிடம் மற்றும் பராமரிப்பு துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தது .இந்த
கடிதத்தை கட்டிடம் மற்றும் பராமரிப்பு அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் விடுமுறை
நாட்களில் இரவு நேரங்களில் இடித்துள்ளனர் .
.பத்து லஞ்சம் ரூபாய் வரை செயற் பொறியாளர் அதிகாரம்
படைத்தவர்
இந்த அதிகாரம் படைத்த செயற்பொறியாளர் கங்காதரன் தலைமை
பத்து லஞ்சம் ரூபாய் என்கிற அதிகாரத்தை வைத்து 45 லட்சம் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை நான்கு பத்து
லட்சமாக ஒரு ஐந்து லட்சமாகவும் பிரித்து
தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்க்கு பணியை கொடுத்து கட்டிடம் காட்டுவதுபோல் சில கட்டுமான
பொருட்களை வாங்கிவைத்து விட்டு மீதி பணத்தை கட்டிடம் கட்டி விட்டதாக கணக்கு எழுதி
பணத்தை சுருட்டி விட்டதாக தெரிகிறது
.பத்து லட்சத்திற்குமேல் உள்ள பணிக்கு கண்காணிப்பு பொறியாளரிடம் அனுமதி வாங்க
வேண்டும் என்பதால் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு பத்து பத்து லட்சமாக
பிரித்து வேலை செய்ததுபோல் ஏமாற்றி பணம் கையாடல் செய்ததாக தெரிகிறது என்றும். கடந்த 2015 வடகிழக்கு பருவமழை வெள்ளச்சேத பணியின் போதும்
நடக்காத வேலைக்கெல்லாம் நடந்தாக பத்து பத்து லட்சமாக பத்து கோடிக்கு பில்
எடுக்கபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர் ஆகவே இந்த அதிகாரிகள் செய்த அணைத்து வேலைகளையும் மீண்டும்
வேறு அதிகாரிகள் வைத்து ஆய்வூ செய்திட விடும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை
வைக்கின்றனர் . நாம் இது தொடர்பாக உதவி
பொறியாளர் பாஸிடீன் வினுவை தொடர்பு
கொண்டபோது தகவல் தர மறுத்து விட்டார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2108 ஏக்கர் பரப்பளவு உள்ள மிக பெரிய குளம் ஆகும் .ஏரல் வடக்காலின் கடைசிக்குளம் .மற்றும் மணியாச்சி ஒட்டநத்தம் கடம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் காட்டு ஆற்று மழை நீர்களும் இந்த குளத்திற்கு வரும் .குளத்தில் தேங்கி மீதம் உள்ள நீர்கள் உப்பு ஆற்று ஓடை வழியாக கடலுக்கு செல்லும் . இந்த நிலையில் இந்த ஆண்டு (2018) வீரநாயகன்தட்டு கிராமம் அருகில் வரும் வெள்ளத்தை தடுக்க தூத்துக்குடி எம் எல் ஏ திருமதி கீதா ஜீவன் நிதியில் 30லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது .
இந்த தடுப்பணை பொதுப்பணித்துறை நீர்வளம் ஏ இ பாஸ்டின் வினு தலைமையின் கீழ் பணி நடைபெற்றது .
இவரின் கீழ் நடைபெற்ற அணைத்து பணிகளும் தரம் இல்லாமல்தான் இருந்தது இவரின் கீழ் கட்டிய அணைத்து நீர் நிலை மடைகளும் சிமெண்டால் கட்டப்பட்ட வாய்க்கால்களும் உடைந்து போய்விட்டது . பாஸ்டின் வினு கட்டிய அணைத்து வேலைகளிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ள அளவுகளிலும் இல்லை(மண்ணிற்குள் இருக்கவேண்டிய 1.80 மீட்டர் அளவு 1 மீட்டரிலும் கட்டி விட்டு தரைக்கு மேல் உள்ள அளவான .45 ஐ மட்டும் சரியாக காண்பித்து 42 மீட்டர் நீள அளவில் 3 சுவர் ) .மண்ணிற்குள் ஒரு அளவு தந்தரைக்குமேல் ஒரு அளவு இருக்கிறது . இதனால் அரசாங்கத்திற்கு மிக பெரிய நஷ்டம் .கீதாஜீவன் எம் எல் ஏ ஒதுக்கி கொடுத்த 30 லட்சத்தையும் மூன்று பத்து லட்சமாக பிரித்து மேலதிகாரியிடம் அனுமதி வாங்காமல் இவர்களின் கட்டுப்பாட்டில் வருமாறு செயற் பொறியாளர் கங்காதரன் பார்த்து கொண்டார் .தடுப்பு அணை என்று சொல்லிவிட்டு பெயருக்கு சிமென்ட்டுடன் அதில் வானம் தோண்டிய சிப்பி மண்ணை கலந்து மூன்று பிரிவுகளாக கட்டி உள்ளனர் .இது சம்பந்தமாக திருமதி தூத்துக்குடி எம் எல் ஏ கீதாஜீவனிடம் கேட்டபோது
பொதுப்பணிதுறை அதிகாரிகள் வீரநாயகன்தட்டு அருகில் கரை உடைந்து விடும் நிலையில் இருக்கிறது தடுப்பணை கட்டி அதை சரிசெய்வதற்கு ரூபாய் 30 லட்சம் எம் எல் ஏ நிதியில் ஒதுக்கி தரவேண்டும் என கேட்டனர் அதன்படி பணம் கொடுக்கப்பட்டது அதோடு என்வேலை முடிந்து விட்டது அதை கண்காணிப்பது என்வேலை இல்லை தவறு நடந்திருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கிறேன் என்று கூறினார் .நாம் மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக கேட்டபோது அதுபோன்ற தகவல் ஏதும் வரவில்லை என்று தெரிவித்தார் .
ஆனால் பொதுமக்கள் கூறுகையில் அதிமு க ஆட்சி நடக்கும் பொது தி மு க எம் எல் ஏ நிதியில் ஊழல் நடக்கிறது என்றால் தி மு க ஆட்சி நடந்தால் என்னவாகும் என்று வருத்தம் தெரிவித்தனர் .மாவட்ட ஆட்சி தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டனர் .
கட்டிய தடுப்பணையை பார்த்தபோது பொறியியல் படித்தவர் கட்டியது போல் இல்லை விளையாட்டு பிள்ளைகள் வீடுகட்டி விளையாடுவதுபோல் உள்ளது.
படம்பிடித்ததை அறிந்த ஏ இ விணு இரவோடு இரவாக தடயத்தை அழிக்க கான்கிரீட் சுவரின் மேல் சிமெண்டு பூசுதல் செய்து வருகிறார்.
கீதாஜீவன்MLA மீது பொதுவாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. அவரின் புகழை குறைக்கும் வகையில் செயல்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா!
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்கள் கருத்து.
கட்டிய தடுப்பணையை பார்த்தபோது பொறியியல் படித்தவர் கட்டியது போல் இல்லை விளையாட்டு பிள்ளைகள் வீடுகட்டி விளையாடுவதுபோல் உள்ளது.
படம்பிடித்ததை அறிந்த ஏ இ விணு இரவோடு இரவாக தடயத்தை அழிக்க கான்கிரீட் சுவரின் மேல் சிமெண்டு பூசுதல் செய்து வருகிறார்.
கீதாஜீவன்MLA மீது பொதுவாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. அவரின் புகழை குறைக்கும் வகையில் செயல்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா!
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்கள் கருத்து.