தூத்துக்குடி13.11.2018
ஷியாம் நியூஸ்
தூத்துக்குடி கோரம்பள்ளம் பஞ்சாயத்து கோரம்பள்ளம் தெருக்களில் சில நாட்களுக்குமுன் பெய்த மழையாலும் கோரம்பள்ளம் குளம் 8 ம் நம்பர் மடை நீர் ஊருக்குள் சென்றதாலும் கோரம்பள்ளம் பொன்னகரம் ஆகிய ஊர்கள் வெள்ளக்காடானது .அதனால் தெருக்கள் சேரும் சகதியுமாக சாக்கடையுடன் காணப்பட்டது .07.11.2018 அன்று ஷியாம் நியூஸ் ல் சாக்கடையில் மிதக்கும் கோரம்பள்ளம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம் .
களத்தில் இறங்கிய பஞ்சயாத்து ஊழியர்கள்!
தண்ணீர் தேங்கிய பகுதிகளில் என்ஜீன் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி அப்பகுதி முழுவதும் நோய் கிருமிகள் தாக்காதவகையில் குளோரின் பவுடர் தூவப்பட்டது .தற்போலுது தெருக்கள் சுத்தம் ஆகிவிட்டாலும்துப்புரவு ஊழியர்களின் கைகளில் பாதுகாப்பது உரை இல்லாமல் பணிபுரிவது வருந்தத்தக்கது ஆகவே பஞ்சாயத்து அதிகாரியும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் துப்புரவு ஊழியர்களும் மனிதர்கள்தான் அவர்களையும் நோய் தாக்கும் என்பதை மனதில் வைத்து கை உறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் .