முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தருமபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்ற 3 அதிமுகவினர் விடுதலை - வழக்கின் பின்னணி

SHYAM NEWS

19 நவம்பர் 2018


தருமபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்ற 3 அதிமுகவினர் விடுதலை - வழக்கின் பின்னணி

பகிர மின்னஞ்சல
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பு ஒன்றால் தண்டிக்கப்பட்டபோது, கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொண்டர்கள் தீ வைத்து எரித்ததில் மூன்று மாணவிகள் கருகி இறந்த வழக்கில், மரண தண்டனை பெற்று, பிறகு அதை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பெற்ற மூன்று அதிமுக-வினரை தமிழக அரசு முன்கூட்டி விடுவித்துள்ளது.
தருமபுரி பேருந்து எரிப்பு - மூன்று பேரும் விடுதலைபடத்தின் காப்புரிமைUNKNOWN
முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று, பத்தாண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கைதிகளை விடுவிக்கப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி சுமார் 1800 ஆயுள் தண்டனைக் கைதிகள் தமிழகச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டபோது, அதனைக் கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொணடர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் மூன்று மாணவிகள் உடல் கருகி இறந்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இது தொடர்பான கோப்பு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பப்பட்டபோது, அதனை அவர் மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, இந்த கொலைகளில் எந்த வித சதியோ, உள்நோக்கமோ இல்லை என்பதால் அரசமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின்படி அவர்களை விடுவிக்கலாம் எனக் கூறி அந்தக் கோப்பை நவம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு மீண்டும் ஆளுனருக்கு அனுப்பியது.
பிறகு ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டது. இந்த ஆணைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சிறைத் துறை தலைமையகத்திலிருந்து வேலூர் சிறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் இன்று பிற்பகல் பன்னிரண்டே கால் மணியளவில் வேலூர் சிறையிலிருந்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக மூன்று பேருக்கும் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி
ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் (1991-96) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள பிளஸன்ட் ஸ்டே என்ற ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி 7 தளங்களை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 1996ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் எச்.எம். பாண்டே, ஹோட்டலின் செயல் இயக்குனர் ராகேஷ் மிட்டல், நிர்வாக இயக்குனர் பாளை சண்முகம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் 2000-வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் வன்முறையில் இறங்கினர். 50 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 5 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை தர்மபுரி மாவட்டத்தில் தடுத்தி நிறுத்திய வன்முறைக் கும்பல், மாணவிகள் முழுமையாக பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பேருந்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தது.
இதில் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருதாசலத்தைச் சேர்ந்த வி. காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 16 மாணவிகள் காயமடைந்தனர். இந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2007 டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...