ஷியாம் நியூஸ்
09.11.2018
திருச்செந்தூர்
கந்தசஷ்டி விரதம் இருக்க சென்றவர் மரணம்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி காலாகரையை சேர்ந்த வெள்ளையன் 56 த/பெ சுடலைமுத்து. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்தார்.இவர் முருக பக்தர் ஆவார்.இவர் சஷ்டி விரதம் இருக்க திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மனைவியுடன் சென்றிந்தார்.
அங்குள்ள கழிவறைக்கு செல்லும்போது அங்கு எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து உள்ளார்.பலத்த அடிபட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்ந்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி பார்வதி50,முருகராஜ் 28 என்ற மகனும் லிங்கம்மாள் 37,உமாமகேசுவரி 31 என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.