12.11.2018
மாணவி சவுமியா பலாத்காரம், படுகொலை, :
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த சவுமியாவை பலாத்காரம் செய்து படுகொலை செய்த ரமேஷ். சதீஷ் என்கிற கயவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
மாணவி சவுமியாவை பலாத்காரம் செய்து . படுகொலை செய்த ரமேஷ். சதீஷ் இருவரும் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 376 ஆகிய பிரிவின் வழக்கு பதிவு செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
குற்றவாளி ரமேஷ். சதீஷ். ஆகிய இருவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் மெனவும் உயிரிழந்த சவுமியா குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் மெனவும் இழப்பிடு உதவி தொகை 20 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் .
சவுமியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.