முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூபாய் 500 கோடியில் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம் நில ஆவணத்தை ஒப்படைத்தார் ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி

ரூபாய் 500 கோடியில் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம்அதற்க்கான நில ஆவணங்களை ஒப்படைத்தார் ஆட்சியர் திரு சந்திப்  நந்தூரி . தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கான 601 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிர்வாக அதிகாரியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைத்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்திப்  நந்தூரி(இ ஆ ப ). தமிழகத்தில் தொழில் துறையில்  வேகமாக முன்னேறி வரும் மாவட்டம் தூத்துக்குடி இங்கு தற்பொழுது 5 விமானங்கள் வந்து செல்கின்றன .மேலும் பெரிய விமானகளோடு சரக்கு விமானம் மற்றும் ராணுவ விமானங்களும் வந்து செல்லும் வகையில் ஓடுதளங்கள் அமைக்கவும் சரக்குகளை கையாள்வதற்கும் ராணுவ விமானங்களை கையாள்வதற்கும் நிர்வாக அலுவலக கட்டிடங்கள் கட்டவும் 601 ஏக்கர் தேவை என  தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அதன்படி ஏற்கனவே 410 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டு இருந்தது மீதம் உள்ள 190 ஏக்கற்கான நிலத்தை இன்று ஒப்படைத்தார் ஆட்சியர் மேலும் 96 ஏக்கர் தேவை என இந்தியா விமான அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளார் அந்த இடமும் விரைவில் ஒப்படைக்கப்படும் மற்றும் 2019 மே மாதத்திற்குள் அணைத்து வேலைகளும் முடிக்கப்...

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய விவகாரம்-ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

ஷ்யாம் நியூஸ் 27.12.2018 கர்ப்பினி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் விவகாரம்: ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பினி பெண் சுதாவிற்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்ததை ஏற்றியவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. சுதாவிற்கு எச்.ஐ.வி தொற்று ரத்ததை ஏற்றியவர்களை பணியில் நிரந்தரமாக நீக்க வேண்டும் மெனவும் இனிவரும் காலங்களில் இதுபோண்ற சம்பவங்கள் நடபெறாமல் இருக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை மெற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . எச்.ஐ.வி ரத்ததால் பாதிக்க பட்ட சுதாவிற்கு அதிகபடியான மருத்துவ சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் உரிய நிவாரணம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

நோய்கள் குறைந்து வருகிறது மீண்டும் வேண்டாம் ஸ்டெர்லைட் ஆலை. பெரியநாயகபுரம் மாதவன்நகர் பொதுமக்கள்!

ஷ்யாம் நியூஸ் 24.12.2018 தூத்துக்குடி :தற்பொழுது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருப்பதால் படிப்படியாக நோய்கள் குறைந்து வருகிறது. ஆலை இயங்கி கொண்டிருந்தபோது மூச்சுவிட ஒருவித கஷ்டம் இருந்து மே 22 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்கு பின் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது அதனால் இடைப்பட்ட இந்த ஏழு மாதங்களாக இயற்க்கையாக சுலபமாக சுவாசிக்க முடிகிறது மற்றும் கேன்சர்  தோல் நோய் ஆஸ்துமா சிறுநீரக கோளாறு  மலட்டுதன்மை இல்லாமல் இருக்ககூடிய சூழ்நிலையை உணர்கிறோம் ஆகவே எங்களுக்கு பழைய தூத்துக்குடி வாழ்க்கை வாழ ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றியது போல் ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பெரியநாயகபுரம் மாதவன்நகர் மேற்க்கு பகுதி மக்கள் பெரியநாயகபுரம் மணி தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி இஆப அவர்களிடம் மணு அளித்தனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்._ஆட்சியர்

ஷ்யாம் நியூஸ் 24.12.2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்-தூத்துக்குடி ஆட்சியர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என பசுமைத்தீர்பாயத்திற்க்கு ஓய்வு பெற்ற நீதிபதி தருன்அகர்வால் குழு பரிந்துரை செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை எந்த நேரமும் திறக்கப்படலாம் என தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஒரு அச்சம் இருந்துவந்தது .இதனால் தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.இதற்கிடையில் ஐகோர்ட் ஜனவரி 21 வரை ஆலையை திறக்ககூடாது என ஒரு ஆணையை வழங்கியது மற்றும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதற்கிடையில் குழந்தைகள் ஒன்றிணந்து ஸ்டெர்லைட் வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுக்க வந்தனர்.மணுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தூத்துக்குடி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஸ்டெர்லைட் ஆலை உறுதியாக திறக்கப்படமாட்டாது. அரசு ஆலையை நிரந்தரமாக மூட அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது எக்காரணம் கொண்டும் ஆலை திறக்கப்படாது மக்கள் பயமோ அச்சமோ பட த...

பாண்டிச்சேரி ரயிலில் TTR ன் ரவுடிதனம்!

ஷ்யாம் நியூஸ் 21.12.2018 கோவில்பட்டி கண்ணியாகுமாரியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் இரயில் வண்டி எண்16862 ல் டிக்கட் பரிசோதகராக பணிபுரியும் T.முத்துப்பாண்டி பயணிகளிடம் ரவுடிகளைபோல் நடந்துவருகிறார்.21.12.2018 சாத்தூர் அருகில் வண்டி சென்று கொண்டு இருக்கும்போது தனது செல்போனில் சத்தமாக நண்பரிடம் பேசியுள்ளார் மற்றும் அவர் அருகில் உள்ள பயணி அவர் பேசுவதர்க்கு இடையுறாக இருப்பதாக எண்ணி நீ வேறு இருக்கையில் இரு என ஒருமையில் பேசியதால் பயணி மரியாதையாக பேசுங்கள் என கேட்டதர்க்காக நான் சொன்னத நீகேள்யா உண் மேல வேற எதாவது கேஷ் போட்டு வெளியில் தள்ளிவிடுவேன் என ரவுடியைபோல் பேசி வருவதாக பயணி தெரிவித்தார்.பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்யும் பயணிகள் என்ன TTR முத்துப்பாண்டிக்கு அடிமையாகளா? எனவே பயணிகள் நலன் கருதி நாகரிகம் இல்லாமல் பேசி நடந்து கொண்ட TTR முத்துபாண்டி மீது ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர். சம்மந்தபட்ட TTR மீது பயணி உடணடியாக ஆன்லைன் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

பொய் சொன்ன ஸ்டெர்லைட் அதிகாரி -போட்டு தாக்கிய பத்திரிகையாளர்!

ஷ்யாம் நியூஸ் 21.12.2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்கலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி தருன்அகர்வால் குழு பசுமைத்தீர்பாயத்திற்க்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. இதனால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஒருவகை அச்சத்துடன் கண்டண குரல் எழுப்பினர். தூத்துக்குடி நகர் மற்று சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் தங்கள் வீடு தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதற்கிடையே தூத்துக்குடி ஆட்சி தலைவர் ஸ்டெர்லைட் ஆலை திறக்கபடமாட்டாது அரசு மேல்முறையீடு செய்ய தயாராக இருக்கிறது பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறிவந்த நிலையில் .நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் தலமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலை இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என  கூறியது தூத்துக்குடி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட்  தலமை நிர்வாக அதிகாரி ராம்நாத்திடம் ஆலைக்கு தேவையான தண்ணீர் தாமிரபரணியில் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு. 25 சதவீதம் தாமிரபரணி ஆற்றிலும் மீதி 75 சதவீதம் தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கம்பெனிகளிடம் வாங்...

தூத்துக்குடி துறைமுகத்தின் புதிய சாதனை!

ஷ்யாம் நியூஸ் 12.12.2018 தூத்துக்குடி துறைமுகத்தின் புதிய சாதனை. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்.. தூத்துக்குடி வ உ சி துறைமுக வரலாற்றில்   4300  சரக்கு பெட்டகங்களை கையாளும் MOTHER VESSEL இயக்கப்படுவது இதுவே முதன் முறை இதன் மூலம் சீனா , மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரைவாக சென்றடையும் என அதிகாரிகள் விளக்கம். 

காயல் நகர ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

  ஷ்யாம் நியூஸ் 12.12.2018 காயல் நகர ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனடியா தமிழக அரசு வழங்க வேண்டும்  : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணம் பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 2015 ம் ஆண்டு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மூண்ணுறுக்கும் மேற்பட்டோர் கலந்து முன்னால் ஆட்சியாளர் ரவிகுமார் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கபட்டது . இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது என்பது குறிப்பிட தக்கது  . காயல் பட்டிணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்களை ஆக்கரமைப்பு செய்ய பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் ஆய்வுக்கு சிறப்பு அதிகாரியாக வருவாய் கோட்டாச்சியாளர் அவர்களின் தலைமையில் ஆய்வு நடத்த பட வேண்டும் அரசு சொந்தமான புறம் போக்கு நிலங்களை  ஆக்கரமைப்பு செய்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண...

தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி: நகை மதிப்பீ்ட்டாளர் கைது - ரூ50 லட்சம் மீட்பு

SHYAM NEWS 06.12.2018 தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி: நகை மதிப்பீ்ட்டாளர் கைது - ரூ50 லட்சம் மீட்பு தூத்துக்குடியில் வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி தொடர்பாக நகை மதிப்பீ்ட்டாளரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஏராளமானவர்கள் தங்கநகை அடகு வைத்து உள்ளனர். இந்த நகைகள் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்தவாரம் அதிகாரிகள் நகைகளை பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த சுமார் 22 பேரின் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.  இது தொடர்பாக டிவிஷனல் மேனேஜர் முகம்மது இஸ்மாயில் அளித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோசடி தொடர்பாக நகை மதிப்பீ்ட்டாளர் கீழ ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சப்பாணிமுத்து மகன் சண்முகசுந்தரம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்பி முரளி ரம்பா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்...

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல் செய்யும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வி ஏ ஓ!

ஷ்யாம் நியூஸ் தூத்துக்குடி 05.12.2018 பிரதம மந்திரி பயிர் காப்பீடு  திட்டத்தில் ஊழல் செய்யும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வி ஏ ஓ! நமது இந்திய நாட்டின் முதுகெலும்ம்பு விவசாயம் அந்த விவசாயிகள் புயல் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால்  நஷ்டம் ஏற்படாமல்  இருக்க மத்திய அரசு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தி  விவசாயிகளின் நலன் காத்துவருகிறது  .விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்குவது கட்டாயமாகும் .இதை பயன்படுத்தி தூத்துக்குடி கோரம்பள்ளம் 1 வி ஏ ஓ திருமதி திரேசம்மாள் மற்றும் தலையாரி (நீர் பாசன காவலர் )ஏகாந்த லிங்கமும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பணம் பெற்று கொண்டு பயிர் செய்யும் நிலங்களை பார்வையிடாமல் சான்று வழங்கி உள்ளார் மற்றும் படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கையூட்டு கொடுக்க முன்வராத விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை மறைத்து   வருகிறார்கள் .இது  சம்பந்தமாக வி ஏ ஒ  அலுவலகம்  சென்றால் வி ஏ ஒ அங்கு...

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களின் பித்தலாட்டம்!

ஷ்யாம் நியூஸ் தூத்துக்குடி 05.12.2018 ஸ்டெர்லைட் ஆலையின் தொடர்ச்சரியான பித்தலாட்டம்! தூத்துக்குடி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 03.12.2018 திங்கள் கிழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் மாதர் சங்கம் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் என ஏராளமான தூத்துக்குடி மக்களுக்கும் சேர்ந்து DROதிரு வீரப்பன் அவர்களிடம் மணுஅளித்தனர்.   மணு அளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள் என அறிந்த காவல்துறை  அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறையால் ஒன்பது அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிறப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதால் சிரமம் இல்லாமல் மக்கள் மணு அளித்தனர்.  அங்கு வந்த மக்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களாக இருந்தனர். 04.12.2018 நாளான நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மணு அளிக்க இந்து மக்கள் கட்சி மற்றும் லாரி உரிமையாளர்  சார்பில் ஆட்ச்சியரிடம் மணு அளிக்க வந்தனர். வந்த மக்கள் திருநெல்வேலியில் உள்ள கிருஷ்ணராஜபுரத்து மக்கள் தூத்துக்குடி மக்கள் இல்லை என தொடர்ந்து கூறிவந்தனர்  .தற்பொழுது அது உண்மை என தெரியவந்துள்ளது. இதுவரை நடந்த ஆலை ஆதர...

தூத்துக்குடியில் அரசுப்பேருந்து ஜப்தி_டீசலுக்கு பணம் வழங்கவில்லை!

ஷ்யாம் நியூஸ்  தூத்துக்குடி  04.12.2018 தூத்துக்குடியில் அரசுப்பேருந்து ஜப்தி தூத்துக்குடியில் டீசலுக்கு பணம் செலுத்தாததால் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருநெல்வேலி அரசுப்போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு தூத்துக்குடி மதுரை ரோட்டிலுள்ள ஒரு தனியார் டீசல் பல்க்கில் டீசல் போடுவது வழக்கம். கடந்த 2016ம் ஆண்டு டீசல் போட்ட வகையில் அந்த பல்க்கிற்கு பணம் 2 லட்சத்து 25000 ரூபாய் பாக்கியிருந்தது. இது குறித்து பல்க்கின் உரிமையாளர் தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், பணத்தை உடனே செலுத்த போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பணம் கட்டாத காரணத்தால் அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற அமீனா டென்சிங், அரசுப்பேருந்து கழக பேருந்தை ஜப்தி செய்தார். பல்க் உரிமையாளருக்காக வழக்கறிஞர்கள் சிங்கராஜ்,பாலமுருகன்,பழனிவேல்ராஜ், சிவராஜ், ஆகியோர் வாதாடினார்கள்.

மது ஒழிப்பு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் சார் ஆட்சியர்!

ஷ்யாம் நியுஸ் தூத்துக்குடி 04.12.2018 மது விழிப்புணர்வு பிரச்சாரம் தூத்துக்குடியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் தூக்கமின்மை வாந்தி இருதயவீக்கம் ,மலட்டுதன்மை கண்பார்வை மங்குதல் கைகால் வலிப்பு ஏற்படுதல் மாரடைப்பு ஏற்பட்டு திமிர் மரணம் தற்கொலைக்கு தூண்டுதல் போன்றவை ஏற்படுகிறது. ஆதலால் மது கள்ளச்சாராயம் அருந்தாமல் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை வாழவேண்டும் என்று மது ஒழிப்பு பிரச்சாரத்தை தூத்துக்குடி சார் ஆட்சியர் பழைய பஸ்நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

ஸ்டெர்லைடை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற மணு!

ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்பு சட்டம் இயற்ற மணு! ஷயாம் நியூஸ் 03.12.2018 தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் அதற்காக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மணு கொடுக்க வந்தனர். இதில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்தனர்.ஸ்டெர்லைட் ஆலை திறக்ககூடாது என மணு கொடுக்க மக்கள் வருவதாக தெரிந்ததும் காவல்துறையால் ஒன்பது அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையால் சிறந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து. மூன்று குழக்களாக வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மக்கள் ஸ்டெர்லைட்க்கு எதிராக கோஷம் போட்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் இல்லாததால்  DRO திரு வீரப்பன் அவர்களிடம் மணு கொடுத்துவிட்டு  அமைதியாக சென்றனர்.

தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது!

ஷியாம் நியூஸ் 30.11.2018 தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது! தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாயர்புரத்தில் அநேக கல்லூரிகளும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இவைகளுக்கு ஆண்டுதோறும் சுகாதாரச் சான்றிதழ் தேவைப்படுகிறது.அனைத்து நிறுவனங்களிலும் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சுகாதார சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சாயர்புரம் Dr.G.U.போப் கல்வியியல் கல்லூரியில் அங்கீகாரம் தொடர்பாக சுகாதார சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ஆழ்வாரப்பன் அவர்களால் வழங்கப்பட வேண்டும் .அவர் சான்றிதழை வழங்குவதற்கு ₹65000 லஞ்சமாக பேரம் பேசி,இறுதியில் ₹25000 க்கு சான்றிதழ் தருவதாக, கல்லூரியில் வேலை செய்யும் திரு.I.ஜெயக்குமார் அவர்களிடம் உறுதியளித்தார். கல்லூரியில் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதால் திரு.ஜெயக்குமார் அவர்கள் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார் .இதனால் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஹெக்டேர் அவர்...

காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

SHYAM NEWS 29.11.2018 காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்  : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்  வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது காவிரியின் குறுக்கே தடுப்பணை கூட புதிதாக கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதை மீறும் விதமாக கர்நாடக அரசு அணை ஒன்றையும், நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது  காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி காவிரி தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசும் மத்திய அரசின் இத்தகை செயல்  தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும். கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.  என்று காய...

ஸ்டெர்லைடின் திங்கள் சந்தை விளையாட்டு!

ஸ்டெர்லைடின் திங்கள் சந்தை விளையாட்டு! ஷியாம் நியூஸ் தூத்துக்குடி 27.11.2018 திங்கள் கிழமை ஆனால் போதும் வறுமையில் வாடும் மக்களுக்கு பண ஆசை காட்டி பணம் தருகிறோம் மனு கொடுக்க வாங்க என அறியாத கிராம மக்களை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என மணு கொடுக்க ஆட்களை ஏஜன்சி  வைத்து அழைத்து வருகிறது ஆலை நிர்வாகம்.எதற்க்கு வந்தோம் எங்கிருந்து வந்தோம் என்றுகூட சொல்ல தெறியாமல் மணு  கொடுக்க வரும் மக்கள்.  ஆலையை தொடர்ந்து எதிர்த்து வந்த பெண் ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர் ஒருவரின் படத்தை எடுத்து அதை பெரிய அளவில் விளம்பர படுத்தி இனி பொதுவாழ்வில் பெண்கள் போராடினால் இது தான் கதி என எச்சரித்து உள்ளது ஆலையின் பணபலம்.அதர்க்கு  பக்க பலமாக இருந்துள்ளது ஜ நா தின் சில கடைசி தூண்கள். யாரை எதனால் அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை (பணம் தங்கம் மற்றும் பல)இருப்பினும் அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லா அஸ்திரத்தையும் ஏவி பார்க்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.ஆனாலும் அஸ்திரம் எல்லாம் புஸ்வானமாகி கிழே விழுகிறது. உலக...

இருட்டு நேரத்தில் முரட்டு வேலை !

ஷியாம் நியூஸ் 22.11.2018 தூத்துக்குடி மைய பகுதில் பாளை ரோட்டு ஓரமாக உள்ளது எம் ஜி ஆர் பூங்கா.இந்த பூங்காவில் காலை தொடங்கி இரவு வரை பொதுமக்கள் நடை பயிற்சி செய்து வருகிறார்கள். தற்பொழுது பூங்கா மேம்படத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பூங்காவை சுற்றி கான்கிரீட் சுவர் எழுப்பபட்டு வருகிறது. இந்த கான்கிரீட் சுவர் முறையாக தண்ணீர் ஊற்றி நனைக்காமல் கான்கிரீட் போட்ட மறுநாளே மண்ணால் மூடிவிடுகின்றனர் என்றும்.  இதனால் சுவர்கள் நீண்ட நாள் உறுதி தன்மையுடன் இருக்காது மற்றும் இங்கு கான்கிரீட்  கலவை செய்யும் இடத்தில் அரசு பொறியாளர்கள் யாரும் இருப்பது இல்லை மற்றும் இரவு 9  மணிக்கு மேல் இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் சித்தால்களை கொண்டு தரைதளத்திற்க்கு மேல் காளம் கான்கிரீட் நிரப்பி வருகின்றனர். இரவு 9மணிக்கு நடக்கும் வேலைக்கு அரசு பொறியாளர்கள் கண்காணிப்பாளர் யாரும் இல்லை இரவு நேரத்தில் முரட்டுதனமான வேலை செய்கின்றனர் என்றும் அரசு பணத்தை கண்காணிக்க ஆள் இல்லாமல் இப்படி வேலை நடந்தால் இந்த கட்டுமானம் விரைவில் விழுந்துவிடும் ஆகவே மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்கவே...
சிபிஐ இயக்குனரின் வழக்கில் பரபரப்பு.. அறிக்கை விவரங்கள் கசிந்ததால் விசாரணை ஒத்திவைப்பு! டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. நேற்று சிபிஐ இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனு குறித்த விவரங்கள் ஊடகங்களில் கசிந்த காரணத்தால் விசாரணை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 12ம் தேதி சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா குறித்து விஜிலன்ஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த விசாரணை அறிக்கை மீதான பதில் மனுவை நேற்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்தார். முதலில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று இந்த மனுவை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து பதில் மனுவை நேற்று மாலை அவர் தாக்கல் செய்தார். என்ன பிரச்சனை குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்...

நம்பகமான தகவல் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால்

SHYAM NEWS   19 நவம்பர் 2018 நம்பகமான தகவல் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் #BeyondFakeNews 19 நவம்பர் 2018 படத்தின் காப்புரிமை GETTY IMAGES Image caption டோனி ஹால் மிகவும் பிளவுபட்டதாக உள்ள இந்த உலகத்தில் நம்பகமான தகவல்கள் இல்லாமல் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்க முடியாது என்று பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் தெரிவித்தார். 'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டத்தின் கீழ் இந்தியாவில் சென்னை உள்ளிட்ட ஏழு நகரங்களில் திங்கள் கிழமை கருத்தரங்குகளை நடத்தும் பிபிசி, தவறான தகவல்கள் ஏன், எப்படி பகிரப்படுகின்றன என்பது குறித்து சொந்தமாக செய்த ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் உரையாற்றிய டோனி ஹால் இவ்வாறு பேசினார். அத்துடன் நல்ல இதழியல் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு கருத்தரங்குகள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் விவாதத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சூழலியாளர...