ஷ்யாம் நியூஸ்
தூத்துக்குடி
04.12.2018
தூத்துக்குடியில் அரசுப்பேருந்து ஜப்தி
தூத்துக்குடி
04.12.2018
தூத்துக்குடியில் அரசுப்பேருந்து ஜப்தி
தூத்துக்குடியில் டீசலுக்கு பணம் செலுத்தாததால் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
திருநெல்வேலி அரசுப்போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு தூத்துக்குடி மதுரை ரோட்டிலுள்ள ஒரு தனியார் டீசல் பல்க்கில் டீசல் போடுவது வழக்கம். கடந்த 2016ம் ஆண்டு டீசல் போட்ட வகையில் அந்த பல்க்கிற்கு பணம் 2 லட்சத்து 25000 ரூபாய் பாக்கியிருந்தது. இது குறித்து பல்க்கின் உரிமையாளர் தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், பணத்தை உடனே செலுத்த போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பணம் கட்டாத காரணத்தால் அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற அமீனா டென்சிங், அரசுப்பேருந்து கழக பேருந்தை ஜப்தி செய்தார். பல்க் உரிமையாளருக்காக வழக்கறிஞர்கள் சிங்கராஜ்,பாலமுருகன்,பழனிவேல்ராஜ், சிவராஜ், ஆகியோர் வாதாடினார்கள்.