ஷ்யாம் நியூஸ்
24.12.2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்-தூத்துக்குடி ஆட்சியர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என பசுமைத்தீர்பாயத்திற்க்கு ஓய்வு பெற்ற நீதிபதி தருன்அகர்வால் குழு பரிந்துரை செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை எந்த நேரமும் திறக்கப்படலாம் என தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஒரு அச்சம் இருந்துவந்தது .இதனால் தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.இதற்கிடையில் ஐகோர்ட் ஜனவரி 21 வரை ஆலையை திறக்ககூடாது என ஒரு ஆணையை வழங்கியது மற்றும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதற்கிடையில் குழந்தைகள் ஒன்றிணந்து ஸ்டெர்லைட் வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுக்க வந்தனர்.மணுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தூத்துக்குடி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஸ்டெர்லைட் ஆலை உறுதியாக திறக்கப்படமாட்டாது.
அரசு ஆலையை நிரந்தரமாக மூட அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது எக்காரணம் கொண்டும் ஆலை திறக்கப்படாது
மக்கள் பயமோ அச்சமோ பட தேவையில்லை என தூத்துக்குடி ஆட்சியர் திரு சந்தீப் சந்தூரி இஆப தெரிவித்தார்.